தூள்…! புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை…!

சேலம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வெல்டர், பெயிண்டர் (பொது), வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8ம் வகுப்பிலும். எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெசினிஸ்ட், மெசினிஸ்ட் கிரைண்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக், AC மெக்கானிக் கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட Technology centre 4.0 ( 1.Manufacturing Process control & Automation 2.Industrial Robotics & Digital Manufacturing Technician 3. Mechanic Electric Vehicle 4.Advanced CNC machining technician போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கைபேசி எண். mail id ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ். e பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-(Debit Card/ Gpay அல்லது Net banking மூலம் செலுத்தலாம்).

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750/-ம். பாடநூல் சைக்கிள், சீருடை, வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களில் Campus Interview மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14 வயது மற்றும் உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். விருப்பமுடையவர்கள் 07.06.2024 அன்றுக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

மாவீரர் அலெக்சாண்டர் மரணம்!… தன் வரலாற்றை உலகம் அறிய செய்தவரின் அவிழாத மர்மம்!

Wed May 15 , 2024
Alexander: தனதுவீரம், குணநலங்களால் அனைவராலும் தி கிரேட் என்று புகழப்பட்ட அலெக்சாண்டர் கி.மு 356 ஆம் அண்டு மெசபோடோமியா (தற்போதைய கிரேக்கம்) நாட்டில் இரண்டாம் பிலிப் மன்னருக்கு பிறந்தார். தன் தந்தையை பின்பற்றி தானும் ஒரு மிகப்பெரிய வீரனாக வந்தவர் இவர். மக்கள் அவரை கிரேக்க கடவுள் வியூஸ் என்பவரின் மகன் என நம்பினர். கிரேக்கத்தில் ஒரு சிறு நகரில் பிறந்து உலகம் முழுக்க தன் வரலாற்றை அறிய செய்த […]

You May Like