அழுகிய பிணங்களுடன் 7 நாட்கள் வாழ்ந்த தாய் மகன் ஈரோட்டில் அதிர்ச்சி !

அழுகிய நிலையில் கடந்த சடலங்களுடன் தாயும் மகனும் ஏழு நாட்கள் வாழ்ந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் குமணன் வீதியைச் சார்ந்தவர்கள் மோகனசுந்தரம் மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு சரவணக்குமார் (33) என்ற மகனும் சசிரேகா (35) உள்ளனர். இதில் சசி ரேகாவுக்கு திருமணமாகி திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவரது மகன் சரவணகுமார் உடல்நலம் சரியில்லாதவர். இதனால் அவர் தாய் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தார். மேலும் சாந்தியின் தாயார் கனகாம்பாளும் இவர்களுடனே யோசித்து வந்தார். மோகனசுந்தரம் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். மிகவும் குறைந்த வருமானத்தில் அவர்களது குடும்பம் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் மோகனசுந்தரம் ஓய்வு பெற்ற பிறகு அந்தக் குடும்பத்தை வறுமை வாட்டி வதைத்தது. இதன் காரணமாக ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டனர். கோவில்களில் வழங்கும் அன்னதானங்களையே பெரும்பாலான நேரங்களில் உணவாக உட்கொண்டு வந்தனர். நோயினால் அவதிப்பட்டு வந்த கனகம்மாளும் மோகனசுந்தரமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தனர். ஆனால் வறுமையின் கோரப்பிடி தாண்டவம் ஆடியதால் அதையும் கைவிட்டனர்.

இந்த சூழலில் மோகனசுந்தரமம் கனகாம்பாளும் திடீரென ஒரு நாலு மரணமடைந்துள்ளனர். இதை யாரிடமும் சொல்லாமல் சாந்தியும் அவரது மகன் சரவணக்குமாரும் இறந்த பிணங்களுடனே ஏழு நாட்கள் இருந்திருக்கின்றனர். இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவர்களது வீட்டிற்குள் சென்று பார்த்த போது அழுகிய பிணங்களின் அருகில் சாந்தியும் அவரது மகன் சரவணகுமாரும் அமர்ந்திருந்தது காவல்துறையினரையும் பொது மக்களையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிணங்களை கைப்பற்றிய காவல் துறை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. இதன் பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் வறுமையின் கோரப்பிடி வயது மூப்பு மற்றும் சரியான நேரத்தில் உணவு கிடைக்காதது போன்ற காரணங்களால் ஒரு வாரத்திற்கு முன்பாக மோகனசுந்தரமும் இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது தாய் கனகாம்பாளும் இறந்ததாக சாந்தி தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் யாரிடமும் தெரிவிக்காமல் பிணங்களுடனே இருந்ததாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டிருக்கலாமே என காவல்துறையினர் அவரிடம் கேட்டனர் அதற்கு யாரிடமும் கேட்க மனம் வரவில்லை என அவர் கூறியது காண்போர் நெஞ்சில் கண்ணீரை வரவழைத்தது.

Baskar

Next Post

இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை..!! திடீரென எழுந்த பகதூர்..!! செம ஷாக்கிங்..!!

Mon Feb 13 , 2023
தனியார் மருத்துவமனையில் பணம் கட்டி விட்டு இறந்தவர் உடலை எடுத்து செல்ல கூறிய நிலையில், அந்த நபர் உயிர் பிழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்தில் வசித்து வருபவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டதால் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அவர் ஹோசியார்பூரில் உள்ள ஐ.வி.ஒய். என்ற பிரபல தனியார் மருத்துவமனையில் […]

You May Like