காவல்துறையில் காதல் மன்னன்! பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி!

திருமணம் செய்வதாக ஆசை காட்டி  விதவைப் பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்து  அவரிடமிருந்து நகை மற்றும்  பணம் பறித்த காவலரால்  காரைக்கால் பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை அடுத்த கீழசுப்பராயபுரம் பகுதியைச் சார்ந்த இளம் விதவை சுதா வயது 39. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுடன்  திருநள்ளாறில் வாழ்ந்து வருகிறார். மேலும் அங்கிருக்கும் காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டு தனது குடும்பத்தை நடத்தி  வந்திருக்கிறார். அந்த காய்கறி கடைக்கு வந்து செல்லும் செருமாவிலங்கை பகுதியை சேர்ந்த குணசேகரன்(42). காரைக்கால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர். அவர் அந்த கடைக்கு வரும் ரெகுலர் கஸ்டமர் என்பதால் சுதாவுக்கும் இவருக்கும் நட்பாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கின்றனர். சுதா ஒரு விதவை என்பதை அறிந்த  குணசேகரன் தானும் விவாகரத்து பெற்றவர் தான் என்று கூறி  சுதாவின் இரக்கத்தை  தனக்கு சாதகமாக பெற்றிருக்கிறார்.

மேலும்  தான் சுதாவை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். கணவர் இல்லாத தவிப்பிலிருந்த சுதாவிற்கு காவலர் குணசேகரனின் வார்த்தைகள் ஆறுதலாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் அவ்வப்போது  தனிமையில் சந்தித்து  தங்களது காதலை வளர்த்துக் கொண்டனர். இந்நிலையில் சுதா குணசேகரன் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால் காவலர் குணசேகரன் தனக்கு நிறைய கடன் சுமைகள் இருப்பதாகவும் அவற்றை தீர்த்துக் கொண்டு பின் திருமணம் செய்யலாம் எனவும் கூறி இருக்கிறார். இதனால் அவர் மீது இரக்கப்பட்ட சுதா  தன்னுடைய நகைகளை விற்றதோடு மட்டுமல்லாமல் வங்கி மற்றும் சுய உதவிக் குழு போன்றவற்றில் கடன் வாங்கி 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை  அவருக்கு உதவியாக  கொடுத்திருக்கிறார். குணசேகரன் தன் கடனை எல்லாம் அடைத்து விட்டு தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று ஆசையிலிருந்த சுதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. சுதா தொடர்ந்து குணசேகரனை வற்புறுத்தி வர குணசேகரன் தொடர்ந்து மறுத்திருக்கிறார். மேலும் ஒரு கட்டத்தில் அவர் சுதாவை மிரட்ட தொடங்கியுள்ளார்.

திருமணம் பற்றி பேச்சு எடுத்தாலே சுதாவை கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார் குணசேகரன். மேலும் தான் காவல்துறையில் இருப்பதால் தன்னை எதுவும் செய்ய முடியாது என  தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதா  திருநள்ளாறு காவல் நிலையத்தில்  குணசேகரன் மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கியகாவல்துறை ஆய்வாளர்  அறிவுச்செல்வன் நேற்று காவலர் குணசேகரனை கைது செய்தார். மேலும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில்  காவலர் குணசேகரன் இதற்கு முன்பும் பெண்களை ஏமாற்றி காசு பறித்து  வந்தது  தெரிய வந்திருக்கிறது. இதுவரை நான்கு பெண்களிடம் இதே போல நெருக்கமாக பழகி  அவர்களை திருமணம் செய்வதாக கூறி அவர்களிடமிருந்து பணம் வாங்கிய பின்  இதேபோன்று ஏமாற்றி வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தன்னை கைது செய்த காவல்துறையினரிடம் என்னை தப்பிக்க விட்டால்  முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாகவும் பேரம் பேசி  இருக்கிறார் காவலர் குணசேகரன்.

Baskar

Next Post

சைக்கோ தம்பதியின் பிடியில் சிக்கிய 14 வயது பணிப்பெண் ஜார்க்கண்டில் கொடுமை!

Fri Feb 10 , 2023
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமியை அந்த வீட்டு உரிமையாளர்கள் கொடுமைப்படுத்தி தாக்கியிருப்பது  பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குர்கானில் வீட்டு வேலை செய்து வரும் 14 வயது சிறுமி காயமடைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து  அங்கு சென்று விசாரித்தது காவல்துறை. பின்னர் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

You May Like