நியூசிலாந்தையும் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்..!!

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன் தாக்கமே இன்னும் தணியவில்லை. இந்த நிலையில், நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்தின் ஆக்லாந்து (Auckland), நேப்பியர் (Napier) போன்ற நகரங்களில் கேப்ரியல் புயல், வெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், வெலிங்டனில் 6.1 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் வெலிங்டனுக்கு அருகிலுள்ள லோயர் ஹட்டிலிருந்து வடமேற்கே 78 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த நிலநடுக்கம் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும், இதன் மையம் பராபரமு நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நிலநடுக்கத்தால், இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

Chella

Next Post

ஏமன் நாட்டைச் சார்ந்த பெண்ணுக்கு கண்களில் 'டீபி' யா? இந்திய மருத்துவர்களின் அபார சிகிச்சையினால் மீண்ட அற்புதம்!

Wed Feb 15 , 2023
ஏமன் நாட்டைச் சார்ந்த 21 வயது மாணவிக்கு கண்களில் காச நோய் என்கிற டீபி வந்த சம்பவம் மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏமன் நாட்டைச் சார்ந்தவர் ஆபிதா 21 வயதான இவர் மருத்துவ பரிசோதனை நிலைய படிப்பில் மாணவியாக இருந்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் எடை இழப்பு ஏற்பட்டது மூன்று மாத இடைவேளையில் 14 கிலோ வரை எடையை இழந்துள்ளார். இதற்கு என்ன காரணம் என […]

You May Like