உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ரூ. 4000 நுழைவுக்கட்டணம் செலுத்தாத நோயாளியை அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் அடித்தே கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம் குவார்சி பகுதியில் வசிப்பவர் சுல்தான்கான் (44). இவர் கடந்த வியாழக்கிழமை கடும் வயிற்றுவலி ஏற்ப்பட்டதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ‘அல்ட்ரா சவுண்ட்’ என்ற பரிசோதனையை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதற்கு ரூ. 4000 நுழைவுக்கட்டணம் செலுத்த தங்களிடம் போதிய பணமில்லை என கூறிய சுல்தான்கான் குடும்பம் தற்காலிகமாக வலி நீங்கும் மாத்திரைகளை மட்டும் வாங்கிவிட்டு கிளம்ப முயன்றனர். பின்பு மருத்துவ ஊழியர்கள் ‘அல்ட்ரா சவுண்ட்’ என்ற பரிசோதனைக்கு பதிந்து விட்டதாகவும் கண்டிப்பாக பணம் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இரும்பு கம்பியால் சுல்தான்கானை தாக்கியுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். அங்குள்ள சிசிடீவீ காட்சிகளை ஆதாரமாக வைத்துகொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.