இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்க்பட்டோரின் மரபணுகளை ஆய்வு செய்ததில் 198 வகை கொரோனா வைரஸ்கள் உள்ளதாக இந்திய விலங்கியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தில் கீழ் இயங்கும் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்நிறுவனத்தில் டி.என்.ஏ வகைபடுத்துதல் பிரிவை சேர்த்த 7 விஞ்ஞானிகள் உலகளாவிய மரபணு வங்கிக்கு(GISAID) அனுப்பட்ட 550 இந்திய மரபணுக்களை ஆய்வு செய்தனர். அதில் 198 வகை கொரோனா வைரஸ் வகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் வகைகள் இந்தியாவில் நுழைந்த பின்னர் அல்லது வருவதற்கு முன் அதன் தகவமைப்பில் மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் குறிப்பாக டில்லியில் கிட்டத்தட்ட 39 வகைகளும், தெலுங்கானாவில் 55 வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்டசமாக குஜராத் 73 வகை கொரோனா வைரஸ் பரவலை கொண்டுள்ளது.

இந்த 198 வகைகளில் இரண்டு மட்டுமே அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. ஒன்று வுஹானிலிருந்து வந்தது மற்றொன்று ஐரோப்பிய வகை. மற்ற ஈரான், துபாய் போன்ற வகைகள் குறைந்த அளவில் உள்ளன என ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கிறது.