மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து ரசித்த கல்நெஞ்சக்கார கணவன்..!! தவிக்கும் பிஞ்சு குழந்தை..!!

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல், வீடியோ எடுத்து ரசித்த கணவன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர் குப்தா. இவரது மகள் சோபிதா குப்தா. குல்மோஹரில் வசிக்கும் சஞ்சய் குப்தா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் சோபிதா. இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து ரசித்த கல்நெஞ்சக்கார கணவன்..!! தவிக்கும் பிஞ்சு குழந்தை..!!

இந்நிலையில், நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டபோது, சோபிதா மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதை சஞ்சய் குப்தா தடுக்காமல் அதை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். பெற்றோர்கள் ஓடி வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதிருக்கிறார்கள். என்ன நடந்தது.. ஏன் சோபிதா தற்கொலை செய்து கொண்டார் என்று மருமகனிடம் கேட்க, சஞ்சய் குப்தா தனது செல்போனில் எடுத்த அந்த வீடியோவை காட்டி இருக்கிறார்.

மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து ரசித்த கல்நெஞ்சக்கார கணவன்..!! தவிக்கும் பிஞ்சு குழந்தை..!!

இதை பார்த்து, தன் மகள் தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல் மருமகன் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார் என்ற ஆத்திரத்தில் சோபிதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கல்நெஞ்சக்கார கணவன் சஞ்சய் குப்தாவையும் கைது செய்தனர்.

Chella

Next Post

ஒருவரின் அஜாக்கிரதையால் பறிபோன 4 உயிர்கள்.! மணப்பாறை அருகே கொடூர விபத்து.!

Thu Oct 27 , 2022
காரில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குடும்பமே பலியான சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த தங்கசாமி தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த , நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறையின் அருகே கார் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்தது. அதனால் , சாலைத் தடுப்பைத் தாண்டி […]

You May Like