இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையால் உளவு பார்த்ததாக கூறி பிடித்து அடைத்து வைத்துள்ள புறாவை தன்னிடம் மீட்டு கொடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு பாகிஸ்தானியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த திங்கள் அன்று இந்தியாவின் கட்டுபாட்டிற்கு கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் ஒரு புறா பிடிப்பட்டது. அதன் காலில் மாட்டப்டட்டுள்ள ஒரு வளையத்தில் சில குறியீடுகள் இருப்பதால் அந்த புறா இந்திய எல்லை பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய காஷ்மீர் எல்லைப்பகுதியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹபிபுல்லா பகுதியை சேர்ந்த கிராமவாசி அது தன்னுடைய புறா என்றும் ஈகை திருநாளை கொண்டாடும் மகிழ்சியில் பறக்கவிட்டதாகவும் டான் என்னும் செய்தித்தாள் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் அதனை தன்னிடம் திருப்பி கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதன் காலில் எழுதியுள்ளது தனது கைப்பேசி என்றும் அது உளவாளியோ, எந்த தீவிரவாத நோக்கமோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை இந்திய எல்லை பாதுகாப்பு படை முக்கிய பிரச்சனையாக கருதுவதற்கு காரணம் இது போன்ற புறாக்கள் எல்லை பகுதியில் பறப்பது இது முதல் தடவை இல்லை என்பதாலும் அதன் காலில் செய்தி ஏதும் எழுதி அனுப்பட்டுள்ளதா என கண்காணிக்கவும் தான் என கூறப்படுகிறது.