குஜராத் மாநிலத்தில் தனது மகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் துணி எம்பிராய்டரி வியாபாரம் செய்யும் தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த மே 22 அன்று மாலை தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்ததுள்ளது. அவர் மீண்டும் அழைத்து கேட்டபோது பெயர் மட்டும் கூறிவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. பின்பு அதே எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப் மூலம் தொழிலதிபரின் மகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை இணையத்தில் வெளியிடாமல் இருக்க மே 24க்குள் ரூ.15 கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இரண்டு நாட்களும் அவருக்கு பலமுறை மிரட்டல் வந்துள்ளது.

இதானால் அவர் சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளார். அவர்கள் விசாரணையில் அந்த மர்ம நபர் ஓதவ் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் தஷ்ரத்சிங் பர்மர் மற்றும் இவரது காதலி பெயர் ரூபல் மகேசுரியா என்பது தெரிய வந்துள்ளது. மகேசுரியா தொழிலதிபர் மகளின் சினேகிதி என்பதால் இந்த முயற்சியை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.