ரகசிய திருமணம் செய்த, காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு…!

தர்மபுரி மாவட்டம், ஜிட்டாண்டஅள்ளி அருகேயுள்ள கொல்லப்பட்டியில் வசித்து வரும் முனியப்பனினி மகள் சினேகா. இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள கவர்மெண்ட் பாலிடெக்னிக் காலேஜில் இரண்டாம் வருடம் படித்து வந்தார். ஜிட்டாண்டஅள்ளி அருகில் உள்ள குளிக்காடு பகுதியில் வசித்து வரும் முருகன் மகன் தமிழரசு தர்மபுரியில் உள்ள ஐடிஐ யில் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் பஸ்ஸில் பயணம் செய்யும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் காதலாக மாறியது.

இந்நிலையில் கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஏழாம் தேதியன்று பாலக்கோடு அருகே இருக்கும் முருகன் கோவிலில் இருவரும் சந்தித்து யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். பின்னர், நாங்கள் இருவரும் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். அதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம், என செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்துவிட்டு விஷம் குடித்தனர். செல்போனில் வந்த தகவலை பார்த்து இரண்டு பேரின் குடும்பத்தினரும் அலறி அடித்து கொண்டு கோவிலுக்கு வந்து பார்த்த போது இரண்டு பேரும் உயிருக்கு போராடியபடி இருந்தனர்.

இருவரையும் உடனடியாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சினேகா உயிரிழந்தார். இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தமிழரசும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரண செய்து வருகிறார். வேறு இடத்தில் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் காதலனுடன் விஷம் குடித்து காதலர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

"செம சான்ஸ்" TNPSC நடத்தும்‌ Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு...! மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Tue Jul 12 , 2022
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ சார்பில்‌ தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரித்தேர்வு வருகின்ற 17.07.2022 அன்று தருமபுரி மாவட்டம்‌ அவ்வையார்‌ பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ காலை 10.00 மணி முதல்‌ 01.00 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச […]

You May Like