மரம் ஒன்று !! பலன் பற்பல!! என்ன மரம் தெரியுமா?

மரம் ஒன்றுதான் ஆனால், அதன் அனைத்து பாகங்களும் நம் உடலுக்கு நன்மை அளிக்கும் மூலிகையாக நமக்கு உதவுகின்றது. கிராமப்பகுதிகளில் கிடைக்கும் கல்யாண முருங்கை எனப்படும் மரம்தான் அது…

கல்யாண முருங்கையின் பூ, விதை, இலை, பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது. இதனை முள்முருங்கை என்ற பெயரும் உண்டு. கல்யாண முருங்கை இலைச்சாற்றை 5 மிலி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான குறைகள் நீங்கும் கருமுட்டை உற்பத்தி அதிகரிக்கும். 

கல்யாண முருங்கை இலையை சாறு எடுத்து 5 மிலி அளவு சாறு அதே அளவு வெந்நீர் கலந்து சாப்பிட வாந்தி வரும். வயிற்று புளிப்பு நீங்கும். குடற்பூச்சியை அகற்றும், செரிமாணத்திறனை அதிகரிக்கும். கல்யாண முருங்கை இலைச்சாற்றை இரண்டு, மூன்று துளிகளை காதினுள் விட கத்துவலி நீங்கும்.

கல்யாணமுருங்கை இலையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நெய் விட்டு வதக்கி சிறுது சின்ன வெங்காயம், தேங்காய் சேர்த்து வதக்கி வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு 4, 5 தடவை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இதன் இலையை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளிக்க தோல்நோய்கள் தீரும். 

கல்யாணமுருங்கை இலைச்சாறு 30மிலி வீதம் 10 நாட்களுக்கு சாப்பிட மாதவிடாய் வலி நீங்கும். இதன் இலையை அரைத்து கட்டிகளுக்கு போட கட்டிகள் குணமாகும். இலைச்சாற்றை 5 மிலி அளவு எடுத்து மோரில் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் உடனே குணமாகும்.

Next Post

மிகப்பெரிய சோகம்...! சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்...!

Fri Nov 4 , 2022
பிரபல எழுத்தாளர் டி.பி.ராஜீவன் உடல் நலக்குறைவால் காலமானார். பிரபல மலையாள-ஆங்கில கவிஞரும், நாவலாசிரியரும், வசன எழுத்தாளருமான டி.பி.ராஜீவன், கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மலையாள எழுத்தாளர்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ராஜீவன் சிறுநீரகம் தொடர்பான நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி தனது 63வது வயதில் காலமானார். மதிப்புமிக்க கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட பல முக்கிய இலக்கிய விருதுகளைப் பெற்றவர். இலக்கிய வட்டங்களில் […]

You May Like