திருச்சி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாமல் கிடந்த சடலம்.! ரயிலில் அடிபட்டு மரணம்.! போலீசார் விசாரணை.!

திருச்சியில் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சியில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதிக்கு அருகே உள்ள தேவஸ்தான ரயில் நிலைய கேட்டு அருகில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையொட்டி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நபரின் சடலத்தை கைப்பற்றினர்.

ரயிலில் அடிபட்டு அவர் இறந்திருக்க கூடும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இறந்த நபரின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை என்பதால் இது குறித்த விசாரணையை போலீசார் துவங்கி உள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Next Post

"தமிழக முதல்வரை பின்னுக்கு தள்ளிய யோகி ஆதித்யநாத்.." - பிரபல பத்திரிக்கை வெளியிட்ட கருத்துக்கணிப்பு.!

Sat Feb 10 , 2024
2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளியாக தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான இந்தியா டுடே , ‘மூட் ஆப் தி நேசன்’ என்ற பெயரில் அரசியல் சார்ந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 338 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மேலும் […]

You May Like