தஞ்சையில் ஒரு பெண் தவறான பழக்கவழக்கங்களை கணவன் கண்டித்தாலும் சொத்து கைவிட்டு போய் விடும் என்ற பயத்தாலும் கூலிப்படை உதவியுடன் நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளார்.

தஞ்சை காயிதே மில்லாத் என்ற நகரை சேர்ந்தவர் யூசுப் (45). குவைத்தில் வேலை செய்து வரும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இரண்டாவதாக அசிலாவை திருமணம் செய்து கொண்டு திருச்சியில் ஒரு குடும்பம், தஞ்சாவூரில் ஒரு குடும்பம் என வாழ்த்து வந்துள்ளார்.
கடந்த 2016ல் யூசுப் மீண்டும் குவைத்க்கு வேலைக்கு போன நேரத்தில் அசிபாவுக்கு சமூக வலைதள மோகம், அதனால் உருவான ஆண் நண்பர்கள் என உலகம் மாறியது. ஆண் நண்பர்களை வீட்டுக்கே அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். யூசுப் அக்கவுண்ட் மேனேஜரும் இந்த வலையில் விழுந்துள்ளார்.
அவர் மூலம் 300 சவரன் நகை, சொத்து என அனைத்தையும் தன் பேருக்கு மாற்றியுள்ளார் அசிபா. இதனை அறிந்த யூசுப்க்கும் ஆசயாக்கும் இடையில் கடந்த 2018 முதல் வாக்குவாதம் மூண்டது. இதனால் யூசுப் சட்டப்படி அசிபாவை பிரிய முடிவெடுத்துள்ளார். இதனால் சொத்து பறிபோகும் என பயந்த அசிபா இரகசியாமாக திட்டம் போட்டு கூலி படைகளை ஏவியுள்ளார்.
தஞ்சாவூர்-திருச்சி சாலையில் வல்லம் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்த யூசுப்பை வழிமறித்த கூலிப்படை அவரை ரோட்டில் ஓட ஓட வெட்டியுள்ளது. இதனை வழக்கு பதிவு செய்த வல்லம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். முதலில் அசிபா தனக்கு எதுவும் தெரியாது என கூறி வரவே போலீசார் உண்மையை கண்டறிந்தனர். பின்பு சொத்துக்கு ஆசைப்பட்டு கணவனை போட்டு தள்ளியதாக அசிபா வாக்குமூலம் அளித்துள்ளார்.