3 சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்..!! அட்டவணை போட்டு அரவணைக்கும் கணவர்..!!

பெரும்பாலான நாடுகளில் முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னர் தான் வேறு நபரை திருமணம் செய்ய முடியும். இருப்பினும் பழங்குடி தொல் கலாசாரத்தை பின்பற்றும் நாடுகளில் பலதார மணம் சட்ட விரோதம் இல்லை. அந்த வகையில், கென்யாவில் ஒரு இளைஞர், 3 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் மூவரும் ஒரே போன்ற தோற்றம் கொண்ட சகோதரிகள். கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற இளைஞர், முதன் முதலில் கேத் என்ற பெண்ணை சந்தித்து பழகியுள்ளார். அப்போது கேத், தனக்கு ஈவ், மேரி என்று இரு சகோதரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த 3 சகோதரிகளும் கோஸ்பல் இசைத்துறையில் பயிற்சி பெற்று இசை கலைஞர்களாக உள்ளனர். முதலில் கேத்திடம் பழகிய அந்த இளைஞர், பின்னர் அவரின் இரு சகோதரிகளிடமும் பேசி பழகியுள்ளார். அப்போது தான் திருமணம் செய்தால் 3 பேரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த இளைஞருக்கு தோன்றியுள்ளது. இறைவன் தன்னை ஒரு பெண்ணுக்காக மட்டும் படைக்கவில்லை என்பதை உணர்ந்ததாக ஸ்டீவோ கூறுகிறார். இதனைத் தொடர்ந்து 3 பெண்களையும் திருமணம் செய்த ஸ்டீவோ, தனக்கு 3 பெண்கள் போதும் என்ற திருப்தியோடு வாழ்வதாக தெரிவிக்கிறார். 3 பேரையும் திருப்தி செய்ய முடிகிறதா என்ற கேள்வி தன்னிடம் பல முறை முன்வைக்கப்படுவதாகக் கூறும் ஸ்டீவோ, மக்களுக்கு இதிலென்ன சந்தேகம் அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை என்கிறார்.

திங்கட்கிழமை மேரிக்கும், செவ்வாய்க்கிழமை கேத்துக்கும், புதன்கிழமை ஈவ்விற்கும் ஒதுக்கி ஒவ்வொரு மனைவிக்கும் அட்டவணைப் போட்டு வாழ்க்கை நடத்துகிறார். ஸ்டீவை திருமணம் செய்த 3 சகோதரிகளும் இனி வேறு ஒரு பெண்ணை எங்களுக்கு குடும்பத்தில் சேர்க்க திட்டமில்லை, நாங்கள் 3 பேருமே அவனுக்கு போதும் என கறாரக முடிவெடுத்து ‘நோ என்ட்ரி’ தடை போட்டு வைத்துள்ளனர்.

Chella

Next Post

மதம் மாறவில்லை என்றால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்வேன் - பள்ளி மாணவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

Mon Feb 6 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவியை  பாலியல் பலாத்காரம் செய்து மதம் மாறவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டிய  இஸ்லாமிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த அலி கான் என்பவர் அப்பகுதியில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவியை அமான் என்ற பெயரில்  காதலித்து வந்திருக்கிறார். அந்த மாணவியுடன் நெருங்கி பழக ஆரம்பித்த அலி செல்போன் மூலம் […]

You May Like