காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய இளைஞர்.. சதை உண்ணும் ஒட்டுண்ணியால் பார்வையை இழந்த சோகம்..

காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய நபருக்கு, ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது..

அமெரிக்காவின் புளோரிடாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. 21 வயதான மைக் க்ரம்ஹோல்ஸ் என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸ் (Contact Lense) அணிந்துள்ளார்.. இருப்பினும், காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கியதால், அவரின் ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.. சமீபத்தில் பிசியான வேலை நாளை முடித்த உடன் தூங்க வேண்டும் என்று அவர் நினைத்ததால், தனது காண்டாக்ட் லென்ஸ்களை அகற்ற மறந்துவிட்டார்.. இது அவருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.. வலது கண்ணில் அகந்தமோபா கெராடிடிஸ் (acanthamoeba keratitis) இருப்பது கண்டறியப்பட்டது. அது ஒரு அரிய சதை உண்ணும் ஒட்டுண்ணியாகும், இது கண்களில் நுழைந்து திசுக்களை சாப்பிடத் தொடங்கியது..

இதன் விளைவாக அவருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. அவரின் வலது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, 50 நாட்களுக்கும் மேலாக வேலை செய்யவோ, படிக்கவோ அல்லது பொதுவாக தனது இயல்பான வாழ்க்கையை வாழவோ முடியாமல் இருந்தார். பின்னர் அவருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது..

பின்னர் ஒரு GoFundMe பக்கத்தை உருவாக்கி, காண்டாக்ட் லென்ஸ் அணியும் நபர்களுக்கு விழிப்புணர்வைப் பரப்பவும், பலவீனப்படுத்தும் ஒட்டுண்ணியை எதிர்த்துப் போராடும் தனக்கு உதவ வேண்டும் என்றும் மைக் க்ரம்ஹோல்ஸ் கோரிக்கை விடுத்தார்.. அவருக்கு பலரும் உதவி செய்தனர்.. இதன்மூலம் 1,000 அமெரிக்க டாலர்கள் வரை கிடைத்தது.. பின்னர், அவருக்கு பி.டி.டி (ஃபோட்டோடைனமிக் தெரபி) என்று அழைக்கப்படும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..எனவே கான்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தவர்கள் தூங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என்று மை க்ரம்ஹோல்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Maha

Next Post

2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…..! எதற்காக தெரியுமா……!

Sat Feb 18 , 2023
இந்திய 2வது பெண் குடியரசு தலைவராக பொறுப்பேற்று இருப்பவர் திரௌபதி முர்மு. இவர் ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவர் சார்ந்த கிராமம் தற்போது தான் மெல்ல, மெல்ல முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரவுபதி முர்மு முதன்முறையாக 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகிறார் டெல்லியில் இருந்து காலை 8:30 மணி அளவில் பெறப்பட்டு விமான நிலையத்திற்கு காலை […]

You May Like