இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..!

ஏவுகணை நாயகன் அப்துல்கலாமின் அதிகம் வெளிவராத தகவல்கள்..!!

ஏ.பி.ஜே அப்துல்கலாமின் நினைவு தினமான இன்று அவரை பற்றிய அறியாத சில தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

அப்துல்கலாமின்

2002-2007 வரை இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்த அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் என்கிற ஏ.பி.ஜே அப்துல்கலாம் டிஆர்டிஓ வின் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். அவர் பிரதமருக்கு தலைமை அறிவியல் ஆலோசகராகவும் இருந்துள்ளார். அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம்-ல் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருந்த போது உயிரிழந்தார். அவரின் நினைவுதினமான இன்று அவரை பற்றிய பலருக்கும் தெரியாத தகவல்களை பார்க்கலாம்…

5 வயதாக இருந்த போது, தனது தந்தைக்கு உதவும் விதமாக செய்தித்தாள்களை விற்க ஆரம்பித்தார் அப்துல்கலாம். அவர் அதற்காக ராமேஸ்வரம் ரோடு ரயில் நிலையம் வரை செல்ல வேண்டியிருந்தது. ஆனால் செய்தித்தாள்களை ஏற்றி வரும், போர் சூழல் காரணமாக, மெட்ராஸ் தனுஷ்கோடி மெயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் கடந்து செல்லும். ஓடும் ரயிலில் இருந்து வீசப்படும் செய்தித்தாள் கட்டுகளை கலாம் எடுத்து விற்பார்.

முஸ்லீம் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இந்து மரபுகளையும் நன்கு தெரிந்துவைத்திருந்தார். அவர் இதயப்பூர்வமான மதசார்பற்றவராக இருந்ததால், சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொண்டார். மேலும் குர்-ஆன், பகவத் கீதை ஆகிய இரண்டையுமே வாசிக்க ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

kalam

தனது ஒட்டுமொத்த சம்பளம் மற்றும் சேமிப்புகளையும், அவரால் தொடங்கப்பட்ட புரா என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார். குடியரசு தலைவரான பிறகு, தனது வாழ்க்கை முழுவதையும் அரசு கவனித்து கொள்ளும் போது, ஏன் தனது சம்பளப் பணத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று கலாம் கேள்வி எழுப்பினார்.

ஏ.பி.ஜே அப்துல்கலாம், ஒரு முறை கூட தொலைக்காட்சி பெட்டியை வாங்கியதில்லை. அவரது தனிப்பட்ட சொத்துக்களில் புத்தகங்கள், உடைகள், வீணை, ஒரு சிடி பிளேயர், ஒரு லேப்டாப் மட்டும் ஆகியவையே அடங்கும். புத்தகங்களை அதிகளவில் வாசிக்கும் பழக்கம் கொண்ட கலாம், பிரபஞ்சம் மற்றும் வானவியல் பற்றிய புத்தகங்களை அதிகமாக வாசித்தவர்.

kalam

இந்திய விமானப் படையின், போர் விமானியாக வேண்டும் என்ற கலாமின் கனவு நூலிழையில் கலைந்தது. ஆம், அதற்கான தேர்வான 25 பேரில் அவர் 9வது இடத்தில் இருந்தார், 8 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடந்ததால் அவரை தேர்ந்தெடுக்கவில்லை.

அப்துல் கலாம் ஒரு தீவிர எழுத்தாளராகவும் இருந்தார். அவர் தனது வாழ்நாளில் 18 புத்தங்களும், 22 கவிதைகளும், 4 பாடல்களும் எழுதியுள்ளார். அவரின் சுயசரிதையான ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் இந்தியாவின் அதிக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த புத்தகமாகவும் அது உள்ளது.

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்த பிறகு, அவர் டிஆர்டிஓ எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பணியாற்ற தொடங்கினார். அங்கு அவர் இந்திய ராணுவத்திற்காக பல்வேறு ஹெலிகாப்டர்களை உருவாக்கினார். மேலும் நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானியான விக்ரம் சாராபாய்க்கு கீழ் அவர் பணியாற்றியுள்ளார்.

apj abdul kalam as major general prithviraj

1963-ம் ஆண்டு நாசா சென்ற கலாம், அதன்பிறகு பிஎஸ்எல்வி மற்றும் எஸ்எல்வி ராக்கெட்கள் திட்டப்பணிகளை செயல்படுத்தினார். இவை வெற்றிகரமாக திட்டங்கள் என்று நிரூபணமாகின. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், அவர் இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்பட்டார்.

பொக்ரான் அணுசக்தி சோதனையில் முக்கிய பங்கு வகித்த கலாம், அதன் பின்னர் நாட்டின் முக்கியமான அணு விஞ்ஞானியாக உருவெடுத்தார். 1992-1999 வரை பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பதிவி வகித்தார் கலாம். இந்தக் காலக்கட்டத்தில் தான் பொக்ரான் அணு சோதனைகள் நடத்தப்பட்டன.

pokhran

கலாம் இந்தியாவின் திருமணமாகாத முதல் குடியரசு தலைவர் மற்றும் விஞ்ஞானியாவார். அப்துல்கலாம் சைவ உணவுகளை மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் உண்டு வந்தார். அவருக்கு 40 பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தன. அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15 உலக மாணவர்கள் தினமாக கொண்டாப்படும் என்று ஐ.நா சபை அறிவித்தது.

1newsnationuser1

Next Post

மாடுகளுக்கு பதில் மகள்களை வைத்து உழுத விவசாயிக்கு ட்ராக்டர் பரிசு... தொடரும் சோனு சூட் கொடைகள்...!

Mon Jul 27 , 2020
ஆந்திர மாநிலத்தில் வறுமையின் காரணமாக மாடுகளுக்கு பதில் மகள்களை வைத்து நிலத்தை உழுத விவசாயிக்கு சோனு சூட் ட்ராக்டரை பரிசாக அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். டீக்கடை நடத்தி வந்த இவருக்கு கொரோனா காரணமாக தொழில் நலிவுற்றது. இதனால் அவர் விவசாயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தனது சொந்த ஊரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடை பயிரிட விரும்பிய அவருக்கு […]
sonu sood 1595764157

You May Like