மக்களே எல்லாரும் உஷாரா இருங்க… வரும் 6-ம் தேதி வரை இங்கு எல்லாம் கனமழை பெய்யும்…! மீனவர்களுக்கு எச்சரிக்கை….

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 5,6 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று முதல் ஜூலை 6 வரை, லட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இன்றும், நாளையும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: #Tax: “சூப்பர் நியூஸ்” இனி நீங்க சொத்துவரி கட்ட அலைய வேண்டாம்…! மொபைல் மூலம் ஆன்லைனில் நீங்களே செலுத்தலாம்…!

Vignesh

Next Post

"செம நியூஸ்" இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.25,000 மானியம்...! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...! முழு விவரம் உள்ளே...

Sun Jul 3 , 2022
தமிழக அரசு இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25,000மானியம் பெறுவதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவித்துள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வக்‌பு ‌ வாரியத்தில்‌ பதிவு செய்யப்பட்டு வக்‌பு நிறுவனங்களில்‌ பணியாற்றும்‌. உலாமாக்கல்‌ தங்கள்‌ பணியினை சிறப்பாகவும்‌, செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய வாகனங்கள்‌ வாங்க மானியம்‌ வழங்கும்‌ திட்டம்‌. செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளி […]

You May Like