’நியூ’ படத்திற்காக சிறைக்கு சென்ற நடிகர் எஸ்.ஜே.சூர்யா..!! கோபத்தில் பெண் அதிகாரியிடம்..!! பகீர் தகவல்

தமிழ் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தனது ’நியூ’ படத்திற்காக இருமுறை சிறைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பல வருடம் போராடி ’வாலி’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து, குஷி படத்தினையும் ஹிட் படமாகவே கொடுத்தார். தொடர் வெற்றிகள் அவரை திக்குமுக்காட செய்தது. இங்கு தான் அவரின் பிரச்சனையும் ஆரம்பித்தது. அவர் இயக்கத்தில் ’நியூ’ படத்தின் கதை தயார் செய்தார். இதை தனது முதல் ஹீரோவான அஜித்திடம் கூறி ஓகே வாங்கி விட்டாராம். சிம்ரன் ரோலில் ஜோதிகாவும் ஃபிக்ஸ் செய்யப்பட போட்டோஷூட்கள் முடிந்துவிட்டன. ஆனால், சில காரணங்களால் அஜித்தால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதை தொடர்ந்து, தானே நியூ படத்தில் நடிக்கவும் எஸ்.ஜே.சூர்யா முடிவு செய்தார். நாயகனாக படத்தில் எண்ட்ரி கொடுத்தார்.

’நியூ’ படத்திற்காக சிறைக்கு சென்ற நடிகர் எஸ்.ஜே.சூர்யா..!! கோபத்தில் பெண் அதிகாரியிடம்..!! பகீர் தகவல்

ஏகப்பட்ட அடல்ட் காட்சிகளுடன் இயக்கப்பட்டிருந்த படம் சென்சாருக்கு சென்றது. அதை பார்த்த ஒரு பெண் அதிகாரி, இதற்கு யூவும் இல்லை யூஏவும் இல்லை என்றார். அதுமட்டுமல்லாமல், எஸ்.ஜே சூர்யாவை தரக்குறைவாக ஏகத்துக்கும் பேசி இருக்கிறார் அந்த அதிகாரி. இதில் கடுப்பானவர், கையில் இருந்த செல்போனை அவர் மீது வீசியுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் ஜாமீனில் விடுதலையானார். அதுமட்டுமல்லாமல், இவருக்கும் சிம்ரனுக்கும் நெருக்கமான காட்சி ஒன்று போஸ்டராக சென்னையின் பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்த மக்கள் பலர் முகம் சுழிக்க உடனே வழக்கும் போடப்பட்டது. அதற்காக அவர் கைதும் செய்யப்பட்டு ஜாமீனில் வெளியானார். ஆனால், இத்தனை தடைகளை தாண்டி வெளியான படம் வைரல் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’இனி போலி மருந்து, மாத்திரைகளை ஈசியா கண்டுபிடிக்கலாம்’..!! எப்படி தெரியுமா..?

Mon Oct 3 , 2022
போலி மருந்துகளைச் சரிபார்க்க கியூஆர் கோடு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாம் சாப்பிடும் மருந்து, மாத்திரைகளில் உள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில், தரமற்ற மற்றும் போலியான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது. அந்த வகையில், சுமார் 300 முன்னணி மருந்து தயாரிப்பாளர்கள் முதன்மை பேக்கேஜிங் லேபிள்களில் பார்கோடுகள் அல்லது கியூஆர் கோடுகளை இணைக்க வேண்டும் […]

You May Like