"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

வீட்டிலிருந்து உலகை காக்க நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது.. நடிகை மீனா அறிவுரை..!

கொரோனா குறித்து விளிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை மீனா வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.

meena101219 2

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களிடம் ஊரடங்கு மற்றும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மீனா வீடியோ ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்து இருக்கிறது. ஆனாலும் நிறைய பேர் இதை பொருட்படுத்தாமல் விளையாட்டாக வெளியே சுற்றுவதை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

இதுபோன்று, அரசாங்கம் சொன்னதை கேட்காததால்தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்களை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,. நூற்றுக்கணக்கானவர்கள் தினம்தினம் பலியாகி வருகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களை கலந்து சென்று கொண்டுள்ளது.

images 29

இந்த நிலைமை நமக்கு வேண்டுமா? இந்த நிலைமை நமக்கு வராமல் இருப்பதற்கு நாம் அரசு சொல்கிறபடி கேட்க வேண்டும். எவ்வளவு நேரம் வீட்டில் உட்காருவது, எவ்வளவு நேரம் டி.வி பார்ப்பது? என்று சொல்லாதீர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களோடு விளையாடுங்கள், குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுங்கள்.

வீட்டு வேலை பாருங்கள், சமையல் அறையில் உதவி செய்யுங்கள். யோகா, தியானம் என்று செய்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து உலகையே காப்பாற்றும் அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது. நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே வீட்டில் இருங்கள்’ என தெரிவித்துள்ளார்

1newsnationuser4

Next Post

ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு : மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்..

Mon Apr 6 , 2020
21 நாள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கு பிறகும், மக்கள் வெளியில் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து தற்போது 4000-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 109 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 […]
corona virus lockdown 1586060069

You May Like