முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி …

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் , அம்மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பொறுப்பில் இருந்து அவர் விடுவித்துக் கொண்டார். பின்னர் அவரது மகன் அகிலேஷ் யாதவ் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை அரியானாவின் குர்கிராம் நகரில் மேதந்தா என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில் , ஐ.சி.யூ.வில் அவரை சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

கட்சி தொண்டர்கள், தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு அருகில் குவிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். முழு அளவில் குணம் பெற்று பின்னர் அவரை சந்திக்கலாம் என கட்சி அறிவித்துள்ளது. மேலும் தந்தை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் , அகிலேஷ் யாதவ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

சமாஜ்வாதி கடசியின் தலைவர் தேர்தல் கடந்த 3 நாட்களுக்கு முன்புநடைபெற்றது அதில் , அகிலேஷ்யாதவ் மீண்டும் 3 வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொண்டர்கள் முலாயம்சிங் யாதவ் பூரண குணம் பெற வேண்டும் என எதிர்பார்த்துக்காத்துள்ளனர்.

Next Post

உத்தரபிரதேசத்தில் விபத்தில் இறந்தவர்களை ஒரே இடத்தில் புதைக்க ஏற்பாடு…

Sun Oct 2 , 2022
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கான்பூரில் உள்ள ஃபதே பூரில் சந்திரிகா தேவி கோயிலுக்கு 50 பேர் கிராம மக்கள் டிராக்டரில் பயணித்தனர். கதம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டர் தடுமாறி குளத்தில் கவிழ்ந்தது. இதில் தலைகுப்புற விழுந்ததில் அனைவரும் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். […]

You May Like