ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. இதனிடையே, சம்பத்தில் திமுக-வை சேர்ந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராமவரத்த்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க்கப்பட்டு உள்ளார் . அவருக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட்டன, தற்போது அவரது உடல்நிலை என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. மக்கள் பிரதிநிதிகள் அடுத்தடுத்து கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.