ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்க அறிவுறுத்தல்….

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களால் ஏராளமானோர் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்குகின்றனர். இதனால் விளையாட்டுக்கு அவர்கள் அடிமையாகின்றனர். ஒரு வேளை அதில் தோல்வியடைந்தால் ஏற்றுக் கொண்டு வெளியேற விரும்புவதில்லை. குறிப்பிட்ட சூதாட்ட செயலிக்கு தங்களை முழு அடிமையாக்கிக் கொள்கின்றனர்.

இதனால் ஏராளமானோர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியை நாடுகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் குறித்து ஏராளமான டிஜிட்டல் நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்கின்றன.

சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாவது டிஜிட்டல் விளம்பரங்களும் ஒரு காரணம் . எனவே விளம்பரங்களை பதிவிடக் கூடாத என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைத்தலங்களோ, வலைத்தலங்களோ , யூடியூப்போ இது போன்ற செயலிகளை விளம்பரம் செய்து ஊக்குவிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Next Post

அக்டோபர் 20-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு…

Mon Oct 3 , 2022
வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல எவ்வளவு மழை பெய்யுமோ அந்த அளவிற்கு இயல்பான அளவில் மழை பெய்யும் . பருவமழை காலத்தில் இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை […]

You May Like