அரியவகை தோல் நோயால் பாதிப்பு… க்ளுகோஸ் ஏற்றிக் கொண்டே டப்பிங் செய்யும் சமந்தா…

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா யசோதா திரைப்பட டப்பிங்கின்போது க்ளுகோஸ் ஏற்றிக் கொண்டே பேசிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா நடித்து வரும் 11ம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் யசோதா. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். 

இதற்கு நன்றி தெரிவித்து சமந்தா ஒரு டுவீட் செய்துள்ளார். அது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதில் தான் மயோசிடிஸ் என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் நான் குணமடைவேன் எனவும் தெரிவித்து ரசிர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

ட்ரெயிலருக்காக சமந்தா பேசும் வாய்ஸ் ஓவர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லா சவால்களை சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கின்றது. ஆட்டோ இம்யூன் எனப்படும் நோய் இருப்பது கண்டயிறப்பட்டுள்ளது. குணம்பெற்ற பின்னர் பதிவிட நினைத்தேன். ஆனால் நான் குணம் பெற அதிக நாட்கள் ஆகும் என தெரிகின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வலுவான நிலையில் எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்பதை நான் பொறுமையாக உணர்கின்றேன். இந்த நோயில் இருந்து குணம் பெற இன்னும் நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். விரைவில் நான் பூரண குணம் பெறுவேன். எனக்கு உடல் ரீதியாக , நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன. ஒரு நாளை கூட என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும் போது அது எப்படியோ கடந்து செல்கின்றது. நான் குணம் பெறுவதை நெருங்கிவிட்டேன். இதுவும் கடந்து போகும் என உருக்கமாக அந்த பதிவில் நடிகை சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

Next Post

பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை...! அனைத்திற்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும்...!

Sun Oct 30 , 2022
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை கார் வெடிப்பு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு போலீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்; தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த […]

You May Like