இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை எங்க நாட்டில் கொரோனா இல்லை! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் உலகின் பயங்கரமான காடு.. இங்கு மக்கள் செல்ல பயப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா..? சிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்.. பழங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..? பயனுள்ள தகவல்.. ஹனி ட்ராப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த கும்பல்.. 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது.. டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் போதும்.. உங்களுக்கு ரூ.35,000 சம்பளம்.. எந்த நிறுவனத்தில் தெரியுமா..? பேராபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்.. வாகன ஓட்டிகள் இனிமே இதற்கும் அபராதம் செலுத்த வேண்டும்.. காவல்துறை எச்சரிக்கை.. ஒருவழியாக முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை.. எப்போது முதல் தெரியுமா..?

மதுரை: கொரானா நோயாளிக்கு 22 லட்சம் லிட்டர் ஆக்சிஜன்..ஒரு மாத போராட்டம்..அரசு மருத்துவர்களின் சாதனை

மதுரையில் அதிதீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன், ரூ.3 லட்சம் பிரத்தியேக மருந்து கொடுத்து 30 நாட்கள் போராடி டாக்டர் குழுவினர் மீட்டு அசத்தியுள்ளனர்.

202006081217493542 Into the hospital Kill the person who received treatment SECVPF 1

மதுரையை சேர்ந்த 54 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த மே 9ல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே நுரையீரல், சர்க்கரை நோய்கள், அதிக உடல்எடை போன்ற பாதிப்புகள் இருந்ததால், தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் அவர் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருந்தால், மூச்சுத்திணறல் பாதிப்பு கடுமையானது. இதுவரை டாக்டர்கள் சந்தித்த வேறு எந்த நோயாளிகளும் இவரளவு பாதிப்பிற்குள்ளாகவில்லை. செயற்கையாக அதிவேக ஆக்ஸிஜன் வழங்க டாக்டர்கள் முடிவு செய்தனர். நிமிடத்திற்கு 60 முதல் 70 லிட்டர் வரை வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விலையுயர்ந்த பிரத்தியேக மருந்தை டாக்டர்கள் பயன்படுத்தினர். ஊசி மூலம் அம்மருந்தை நோயாளியின் உடலில் சில நாட்கள் செலுத்தினர்.

images 24

உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் செயற்கை ஆக்ஸிஜன் இன்றி நன்றாக சுவாசிக்க துவங்கினார். எனினும் பூரண குணமடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. மதுரை கொரோனா வார்டில் அதிக நாட்கள் சிகிச்சையில் இருந்தவர் இவர் தான். தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சிகிச்சையளித்த நுரையீரல் துறை தலைவர் பிரபாகரன், பொது மருத்துவத் துறை தலைவர் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவை டீன் சங்குமணி பாராட்டினார்.

இதுதொடர்பாக பேசிய டீன் சங்குமணி, ‘நாங்கள் சந்தித்த கொரோனா நோயாளிகளிலேயே இவர் மிகவும் சவாலாக இருந்தார். 30 நாட்கள் போராடி குணமாக்கியுள்ளோம். இதை டாக்டர்கள் குழுவின் சாதனை என்றே கூறுவேன். மொத்தம் 22 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கியுள்ளோம். நோய் எதிர்ப்பு சக்திக்காக அவரது உடலில் ஏற்றப்பட்ட மருந்தின் பெயர் ‘டொசுலிசுமேப்’; விலை ரூ.3 லட்சம். தனியார் மருத்துவமனையில் இச்சிகிச்சையளிக்கப்பட்டிருந்தால் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது’ என தெரிவித்து உள்ளார்.

மேலும், பொதுவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால் நிமிடத்திற்கு 5 முதல் 6 லிட்டர் (வாயு நிலையில்) வரை ஆக்ஸிஜன் வழங்குவோம். ஆனால் இவருக்கு பாதிப்பு தீவிரமாக இருந்ததால் 10 மடங்கு கூடுதலாக வழங்கினோம்’ என மருத்துவமனை ஆக்ஸிஜன் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

1newsnationuser4

Next Post

முதலமைச்சருக்கு கொரோனா நெகட்டிவ் : பரிசோதனையில் தகவல்

Tue Jun 9 , 2020
டெல்லி முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று முன் தினம் முதல், உடல் நிலை பாதிக்கப்பட்டது. 51 வயதான அவருக்கு லேசான, காய்ச்சல், இருமல் இருப்பதால், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் அவரது அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் […]
கொரோனா நெகட்டிவ்

You May Like