நியூசிலாந்தில் கொரானா முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 24 நாட்களுக்கு பிறகு அங்கு இருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொலைகார நோயான கொரானாவிற்கு என தனியாக மருந்து என இதுவும் கண்டறியப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது. மேலும், சிகிச்சையை காட்டிலும் தனிமனித இடைவெளி, மாஸ்க் போன்றவை கொண்டு நோய்த்தொற்று பரவலை தடுப்பதே நல்லது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல வல்லரசு நாடுகள் தவித்து வரும் நிலையில், தீவிர முயற்சிகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்தில் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை உருவானது. இதன் காரணமாக 7 வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கடந்த 10-ம் தேதி முதல் அங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 22 மட்டுமே. மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். கொரானாவை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உலக அளவில் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில், நியூசிலாந்திற்கு கொரானா வைரஸ் மறுவீடு சென்றுள்ளது. கொரோனா பாதிப்பு நீங்கிய நாடாக நியூசிலாந்து நிகழ்ந்த நிலையில், 24 நாட்களுக்குப் பிறகு அங்கு 2 பேருக்கு கொறனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் என்று தெரியவந்துள்ளது. 24 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா வந்துள்ளது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.