கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி போடுவதாக கூறி தந்தையே தனது மூன்று மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்துள்ள சம்பவம் எகிப்தில் நடந்துள்ளது.

எகிப்தில் பெண்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்கால திருமண வாழ்க்கைக்காக பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இது 2008ம் ஆண்டு முதல் குற்றம் என அறிவிக்கப்பட்டு சட்டப்படி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மறைமுகமாக பலர் இந்த குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வகை சடங்கு முறைகளால் பெண்கள் சிறுநீர் குழாயில் தொற்று, கருப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளில் தொற்று, நீர்க்கட்டிகள், கருத்தரிப்பில் பிரச்சனை மற்றும் உடலுறவின்போது வலி போன்ற இன்னல்களை சந்திக்கின்றனர்.

இந்நிலையில் எகிப்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி போடுவதாக கூறி தனது மூன்று மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்துள்ளார் அவரது தந்தை. இதனை அடுத்து மகள்களின் தாய் அளித்த புகாரின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.