வரும் 10ஆம் தேதியே அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையில் ஆஜராக வேண்டும்..! தலைமைக் கழகம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வரும் 10ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. பொதுக்குழு தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வந்தாலும், மற்றொரு புறம் பொதுக்குழு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை கழகம் செய்து வருகிறது. அதிமுகவில் 2,665 பேர் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 2,432 பேர் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போது 2,442 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர்.

சட்டத்திற்குப் புறம்பான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்: அதிமுக  பொதுக்குழு மேடையில் வைத்திங்கம் ஆவேசம் | admk meet updates - hindutamil.in

மேலும், சில பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு தூதுவிட்ட வண்ணம் உள்ளனர். வரும் 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு பேருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வரும் 10ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவர்களை அழைத்து வர மாவட்ட செயலாளர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Chella

Next Post

'திமுகவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிப்பு'..! சசிகலா காட்டம்

Fri Jul 8 , 2022
திமுகவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, “பல அடக்குமுறைகள் இருந்த போதும் அம்மாவும் நானும் சேர்ந்து கழகத்தை கட்டி காத்துள்ளோம். அம்மாவிடம் இருந்த என் நட்பு புனிதமானது. அம்மா என் மீது வைத்திருந்த அன்பு இந்த உலகத்தில் உள்ள யாரும் வைத்திருக்க முடியாது. என்னை அம்மாவிடம் இருந்து பிரிக்க […]
திமுக ஆட்சியின் அவலநிலை..! இதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தான் ஒரே தீர்வு..! - சசிகலா

You May Like