ஓ.பி.எஸ்-க்கு தொடர்ந்து செக்… மேலும் 18 பேர் கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கம்…! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி….!

வீந்திரநாத், ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவை தடை செய்ய ஓ.பி.எஸ் தரப்பினர் செய்த அனைத்து முயற்சிகளும் எர்கொண்டனர். ஆனால் அது எந்த பலனும் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். வரும் ஜூலை 17-ம் தேதி அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.  இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்திரநாத், ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கட்சியின் கொள்கை – குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் 18 பேரை நீக்கம் செய்யபடுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்திரநாத், ப.ஜெயபிரதீப் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்ரமணியன், ஓம்சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்பிக்களான ரா.கோபாலகிருஷ்ணன், சையதுகான், அதிமுகவின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த மருது அழகுராஜ், எஸ்.ஏ.அசோகன், அம்மன் பி.வைரமுத்து, டி.ரமேஷ், பி.விணுபாலன், கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, சைதை எம்.எம்.பாபு மற்றும் எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: TRB முக்கிய தகவல்: மொத்தம் 1,060 காலி பணி இடங்கள்…! நேர்காணல் கிடையாது என தேர்வு வாரியம் அறிவிப்பு…!

Vignesh

Next Post

இந்தியாவில் ஆட்டத்தை தொடங்கிய குரங்கு அம்மை... 3,413 பேர் இது வரை பாதிப்பு...! எல்லாம் உஷரா இருங்க... மத்திய அரசு போட்ட உத்தரவு...!

Fri Jul 15 , 2022
குரங்கு அம்மை நோய் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 1 ஜனவரி 2022 முதல் 22 ஜூன் 2022 வரை, ஆய்வக பரிசோதனைகளுக்கு பிறகு, 50 நாடுகளைச் சேர்ந்த […]

You May Like