அதிமுக அலுவகத்திற்கு சீல்.. நீதிமன்றத்தில் முறையிட்ட இபிஎஸ்…

அதிமுக அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்ற உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்த நிலையில் நேற்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் ஏற்பட்டது.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டதால் பதட்டம் நிலவியது.. பதாகைகள் தீ வைத்து எரிக்கபப்ட்ட நிலையில், வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது..

இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.. தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலகத்திற்கு சீல் வைப்பது தொடர்பாக நோட்டீஸை வழங்கினர்.. பின்னர் அங்கிருந்த ஓபிஎஸ் உடன் வருவாய் துறை பேச்சுவார்த்தை அங்கிருந்தவர்களை வெளியேற்றினர்.. இதையடுத்து அதிமுக அலுவலக பகுதியில் சட்டவிரோதமாக பலர் கூடும் போது விதிக்கப்படும் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.. மீண்டும் அலுவலகத்தை திறப்பது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது..

இந்நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்ற உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி அதிமுக அலுவலக சீலை அகற்ற வேண்டும் என்று முறையிட்டார்.. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அந்த முறையீட்டை நாளை விசாரிப்பதாக தெரிவித்தார்..

Maha

Next Post

மனைவியை மிரட்டிய மீன் வியாபாரி வெட்டிக்கொலை..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Tue Jul 12 , 2022
தனது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி, ஆபாசமாக பேசிய மீன் வியாபாரியை வெட்டிக்கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர் நாகல்கேணி மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். அதே இடத்தில் மீன் வெட்டும் வேலை செய்பவர் சிரஞ்சீவி (24). இந்நிலையில், சிரஞ்சீவின் வீட்டிற்கு சென்ற பாண்டியன், அவரது மனைவி பவானியை ஆபாசமாக திட்டி கத்தியை […]

You May Like