‘சாமிக்கு மாலை போட்டு விட்டு குடிக்கலாமா’? என கேட்ட தாய் பீர் பாட்டிலை உடைத்து குத்திய மகன்!

பக்தி விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்கச் சொன்ன  தனது தாயை  மகன் குத்திக் கொன்ற சம்பவம்  சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வியாசர்பாடி பதினொன்றாவது தெருவை சார்ந்தவர் அப்பனு வயது  51  இவருக்கு திருமணம் ஆகி கண்ணகி என்ற மனைவியும்  அஜய் மற்றும் அமலா என்ற  இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அமலாவுக்கு திருமணம் ஆகிய அவர் கணவருடன் வசித்து வருகிறார். மகன் அஜய் ரயில்வே துறையில்  ஒப்பந்த பணியாளராக கூலி வேலை செய்து வந்தார். இளம் வயதிலேயே போதைக்கு அடிமையான அஜய் போதையின் காரணமாக அவரது பணியில் இருந்தும்  நீக்கப்பட்டு  வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அடிக்கடி தனது தாயாரிடம்  மது அருந்த  காசு கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி  தந்தை அப்பனு  இரவு பணிக்காக  தனது வேலைக்குச் சென்று இருந்த  நிலையில் அஜய் தனது தாயாரிடம்   மது குடிக்க காசு கேட்டுள்ளார். இதற்கு அவரது தாய் கண்ணகி மறுக்கவே ஆத்திரத்தில்  கையில் கிடைத்த பீர் பாட்டிலை எடுத்து அவரது முகம் நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் பலமாக குத்தியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மக்கள்  அவரை மீட்டு காவல்துறை உதவியுடன்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட அஜயையும்  காவல்துறை தேடி வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவினால் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணகி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் தப்பியோடிய ஜெய் காவல்துறையினர் பிடித்து  அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில்  மது பழக்கத்திற்கு அடிமையான அஜய் அதிலிருந்து மீண்டு வருவதற்காக  சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு மாலை அணிவிக்க  பெற்றோர் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன்படி அவரும் மாலை அணிவித்திருக்கிறார். ஆனாலும் அவர்  அதற்கான ஆச்சாரங்களை பின்பற்றாமல்  எந்நேரமும் போதையிலேயே இருந்துள்ளார்.

இது தொடர்பாக சம்பவம் நடந்த இரவும் தன் தாயிடம் மது குடிக்க பணம் தருமாறு அவரை தொந்தரவு செய்து இருக்கிறார். அப்போது அவரது தாய் சாமிக்கு மாலை போட்டு இருக்கும்போது மது குடிக்க கூடாது என கண்டிப்பாக கூறியுள்ளார். நீ மாலை போட்டிருப்பதே இந்த பழக்கத்திலிருந்து விடுபட தான்  மறுபடியும் ஏன் அதே பழக்கத்தை தொடர்கிறாய்? எனவும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் விரும்பாட்டிலை எடுத்து உடைத்து தனது தாயை பலமாக குத்தி  கொலை செய்து இருக்கிறார் என அந்த விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜய் மீது  கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை  அவரை சிறையில் அடைத்தது. கடவுளுக்கு மாலை போட்டு இருக்கும் சமயத்தில் ஏன் குடிக்கிறாய்? என கேட்ட  தாயை மகன் கொன்ற சம்பவம்  அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

நரபலி கொடுக்க இருந்த சாமியார்! போராடிக் காப்பாற்றிய காவல்துறை - நாகர்கோவிலில் நடந்த திக் திக் சம்பவம்!

Fri Feb 10 , 2023
நாகர்கோவில் அருகே  நரபலி கொடுக்க இருந்த குழந்தையை கடைசி நேரத்தில் காவல் துறை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும்  அதே நேரம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகர்கோவில் பகுதியைச் சார்ந்தவர் கண்ணன் இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி அகிலா இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகனும்  இரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளனர். கண்ணன் ஐடி நிறுவனத்தில் சென்னையில் பணி […]

You May Like