பாலிவுட் நடிகை ஆலியா பட் தன் சகோதரி ஷாஹீன் பட்டுடன் மும்பை ஜுஹு பகுதியில் வசித்து வந்தார். இந்த அபார்ட்மென்ட்டின் விலை ரூ.13.11 கோடி என கூறப்படுகிறது.

பாலி ஹில் பகுதியில் அவரது காதலன் நடிகர் ரன்பிர் கபூர் வசிக்கும் வாஸ்து என்கிற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் 2,460 சதுர அடியில் அபார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் தான் ரன்பிர் கபூர் வசித்து வருகிறார். காதலருக்கு பக்கத்திலேயே இருக்க ஆசைப்பட்ட ஆலியா ரூ.32 கோடி செலவில் அந்த அபார்ட்மெண்ட்டை வாங்கியுள்ளார்.
தன் குடும்பத்தார், ரன்பிர் கபூர், இயக்குநர்கள் கரண் ஜோஹர், அயன் முகர்ஜி ஆகியோருடன் சேர்ந்து அண்மையில் தான் புது வீட்டில் பூஜை நடத்தினாராம் ஆலியா. மேலும் வீட்டிற்கு இன்டீரியர் வொர்க்கிற்காக நடிகர் ஷாருக்கானின் மனைவியை கேட்டு கொண்டுள்ளார் ஆலியா. விரைவில் வேலைகள் முடிந்ததும் புது வீட்டில் குடியேறவுள்ளார் என தகவல்கள் வந்துள்ளது.