ஏலியன்களா..? அமெரிக்கா சுட்டு வீழ்த்திய மர்ம பொருட்கள்.. ராணுவ அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்திலோ அல்லது வேற்று கிரகத்திலோ வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை யாரிடமும் இல்லை. எனவே ஏலியன் தொடர்பான மர்மங்கள் இன்றும் தொடர்கின்றன..

இந்நிலையில் அமெரிக்காவில், வானில் ஒன்றன் பின் ஒன்றாக பல மர்மப் பொருட்கள் காணப்படுவது ஏலியன் குறித்த ஆர்வத்தை மீண்டும் தூண்டி உள்ளது.. அமெரிக்க விமானப்படையின் ஜெனரல் க்ளென் வான்ஹெர்க், வேற்றுகிரகவாசிகள் குறித்து தனது சந்தேகத்தை தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அமெரிக்க உளவுத்துறை நிபுணர்கள் அந்த மர்ம பொருட்களை எப்படி ஆய்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது வேற்றுகிரகவாசிகளின் வேலையா அல்லது வேறு ஏதேனும் பொருளா என்பது தெரியவரும்.. இந்த கட்டத்தில், அமெரிக்காவை நெருங்கும், ஒவ்வொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் நாங்கள் தொடர்ந்து மதிப்பிடுகிறோம்,” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் “ கடந்த மூன்று நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட சமீபத்திய மூன்று பொருள்கள் எப்படி உயரத்திற்கு சென்றன என்பதை தீர்மானிக்க முடியவில்லை.. அது ஒரு கட்டமைப்பிற்குள் இருக்கும் வாயு வகை பலூனாக இருக்கலாம் அல்லது சில வகையான உந்துவிசை அமைப்பாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்..

கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரை அமெரிக்க ராணுவம் 3 சந்தேகத்திற்கிடமான பொருட்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் ஒன்று கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அலாஸ்கன் கடற்பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு பொருளையும், தென் கரோலினா கடற்கரைக்கு அருகே ஒரு சீன உளவு பலூனையும் ஒரு வாரத்திற்கு முன்பு அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. வானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருவதால், அமெரிக்காவில் ஏலியன்கள் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

Maha

Next Post

சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்...! அமீர் கானுடன் நடித்த பிரபல கலைஞர் காலமானார்...!

Tue Feb 14 , 2023
பிரபல கலைஞர் லலிதா லஜ்மி, இந்திய எழுத்தாளர் மறைந்த குரு தத்தின் சகோதரி, 90 வயதில் காலமானார். 2007 ஆம் ஆண்டு அமீர் கான் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தில் ஒரு சிறப்புக் கலைஞராக லலிதா நடித்துள்ளார், இதில் அமீர் கான் கலை ஆசிரியராக நடித்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக தனது 90 வது வயதில் காலமானார். லலிதா லாஜ்மியின் மறைவுச் செய்தியை ஜஹாங்கிர் நிக்கல்சன் […]

You May Like