உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

“லடாக்கில் இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன..” ராகுல்காந்திக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் பதில்..

லடாக் மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என்று மத்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 இந்திய வீரர்களிடம்

இந்திய – சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 15-ம் தேதி இருநாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில், மிக மோசமான மோதலாக இது பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து கேள்விகளை எழுப்பும் ராகுல்காந்தி, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் “ஆயுதம் இல்லாத இந்திய ராணுவ வீரர்களை கொன்றதன் மூலம் சீனா மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. ஆபத்தான நிலைக்கு, யார் இந்திய வீரர்களை அனுப்பியது..? ஏன் அனுப்பினார்கள்..? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்..? என்று கேட்கவிரும்புகிறேன்” என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ராகுல்காந்திக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ உண்மையை நேரடியாக பேசுவோம்.. எல்லையில் கடமையில் உள்ள அனைத்து வீரர்களும், எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள். அந்தவகையில், ஜூன் 15 அன்று கால்வானில் இருந்தவர்களும் ஆயுதங்களை வைத்திருந்தனர். 1996 & 2005 ஒப்பந்தங்களின்படி, மோதல்களின் போது துப்பாக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற நீண்டகால நடைமுறை காரணமாக அவற்றை பயன்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

#BreakingNews : தமிழகத்தில் இன்றும் 2,000 பேருக்கு மேல் கொரோனா பாசிட்டிவ்.. ஒரே நாளில் 49 பேர் பலி..

Thu Jun 18 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தமிழக பாதிப்பு எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது. […]
தமிழகத்தில்

You May Like