சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

கொரோனா பீதி.. சினிமா, டிவி, விளம்பரம் என அனைத்து படப்பிடிப்புகளும் வரும் 19-ம் தேதி முதல் ரத்து..

கொரோனா பீதி காரணமாக, சினிமா, டிவி, விளம்பரம் என அனைத்து படப்பிடிப்புகளும் வரும் 19-ம் முதல் ரத்து செய்யப்படும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

shooting cancelled

சீனாவில் உஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 141 நாடுகளில் பரவியுள்ளது. உலகம முழுவதும் 6,420 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கொரோனா பெருந்தொற்று நோய் பரவும் மையமாக ஐரோப்பாவை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து உலக நாடுகள் பலவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரிகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் திரைப்படங்கள், டிவி சீரியல்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய திரைப்படம் சங்கம் ஏற்கனவே அறிவித்தது.

theatres closed

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்திலும் படப்பிடிப்பை ரத்து செய்வது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெப்சி சார்பில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே. செல்வமணி, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வரும் 19-ம் தேதியில் இருந்து சினிமா, டிவி, விளம்பரம் தொடர்பான அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.

rk selvamani

இண்டோர், அவுட்டோர் என அனைத்து படிப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை இந்த நிலையே தொடரும். பொருளாதார ரீதியாக இது, சினிமாவுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எல்லாவற்றையும் விட உயிர் முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. அனைவரும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

“அரசியலில் நான் போட்ட புதுப்புள்ளி சுழலாக மாறியுள்ளது.. அது சுனாமியாக மாறி, அதிசயம், அற்புதம் நடக்கும்..” ரஜினிகாந்த் பேச்சு..

Mon Mar 16 , 2020
அரசியலில் தான் போட்ட புதுப்புள்ளி தற்போது சுழலாக மாறியுள்ளதாகவும், அது விரைவில் சுனாமியாக மாறி அதிசயம், அற்புதம் நடக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனலின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “பாண்டே போன்று கேள்வி கேட்பவர்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. என்னிடம் […]

You May Like