’அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றம்..!! மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என மத்திய தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கிய 12-வது பள்ளி உளவியல் சர்வதேச மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”கொரோனா பெருந்தொற்று நேரத்தில், தொலைநோக்கு பார்வையுடன் பல முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார். அதனை திடமாக செயல்படுத்தியதால், கொரோனா தடுப்பூசியில் இன்று தன்னிறைவு பெற்றுள்ளோம். 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம். கல்வியில் குழந்தைகள் தேவையை அறிந்து கற்பிக்க வேண்டும். அதற்காகத்தான் தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு நெகிழ்வு தன்மை உருவாக்கி இருகின்றனர்.

’அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றம்..!! மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

குழந்தைகள் எதை கற்க விரும்புகிறார்களோ அதனை தான் தேசிய கல்வி கொள்கையில் முன்னேடுத்துள்ளோம். குழந்தைகளின் எதிர்காலம் கருதி மிகுந்த பயன்தர கூடிய புதிய கல்வி கொள்கையை திட்டமிட்டு வருகிறோம். ஆனால், அதன் பலன் ஆசிரியர்கள் கைகளில் தான் உள்ளது. அதனை ஆசிரியர்கள் சரியாக செயல்படுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையை அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் எதிர்க்கின்றனர். புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! முதல் பெண் தபால்காரர் கே.ஆர்.ஆனந்தவல்லி காலமானார்..!!

Mon Oct 3 , 2022
கேரள மாநிலத்தில் முதல் பெண் தபால்காரர் கே.ஆர்.ஆனந்தவல்லி, உடல்நலக்குறைவால் காலமானார். சிறிது காலத்திற்கு முன்பு வரை தகவல் பரிமாற்றத்திற்கு தபால்களே பெரும்பாலும் பயன்பட்டன. அவரவர் சொந்த கையெழுத்தில், விரும்புபவர்கள் முகவரி தேடி தபால்காரர்கள் மூலம் பயணித்து வரும் கடிதங்களை பெற காத்துக் கிடந்த காலங்கள் உண்டு. செல்போனின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு தபால்காரர்கள் நினைவுகளே இந்த கால குழந்தைகளுக்கு இல்லை எனலாம். இந்நிலையில், கேரள மாநிலத்தில் முதல் பெண் தபால்காரராக […]
பெரும் சோகம்..!! முதல் பெண் தபால்காரர் கே.ஆர்.ஆனந்தவல்லி காலமானார்..!!

You May Like