“ இதை எல்லாம் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது..” குற்றவாளியை விடுவித்த உச்சநீதிமன்றம்..

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த நைம் அகமது என்பவருடன், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளார்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் நைம் அகமது குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.. இந்த தீர்ப்பை எதிர்த்து நைம் அகமது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.. இந்த வழக்கு நேற்று அஜய் ரஸ்தோகி மற்றும் பேலா எம் திரிவேதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..

அப்போது பெண்ணின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற தவறான நம்பிக்கையில் நைம் அகமதுவுடன் பாலியல் உறவுக்கு அப்பெண் சம்மதம் அளித்துள்ளார்.. இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் அவரை குற்றவாளி என்ற சரியான முடிவுக்கு வந்தது..” என்று தெரிவித்தார்..

நைம் அகமது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் கே சௌத்ரி “ அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். அப்பெண் 2009ல் தன் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு நைம் அகமதுவுடன் ஓடிவிட்டார்.. அப்பெண்ணுக்கு 2011-ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.. 2012-ல் நைம் அகமதுவின் சொந்த ஊருக்கு சென்ற போது அவர் திருமணமானவர் என்பதும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் அப்பெண்ணுக்கு தெரியவந்தது..

ஆனாலும் கூட, அவர் 2014-ல் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தனது 3 குழந்தைகளையும் கணவனிடம் கொடுத்தார்.. எனினும் திருமணத்தை தொடர்ந்து தவிர்த்து வந்ததால் 2015-ம் ஆண்டு நைம் அகமது மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.. அந்தப் பெண்ணின் அதிக நிதிக் கோரிக்கைகளை நைம் அகமது பூர்த்தி செய்ய முடியாததால் அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது..” என்று வாதிட்டார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் “ நைம் அகமதுவுடன் உறவு வைத்து தனது கணவனுக்கும் குழந்தைகளுக்கும் துரோகம் செய்துள்ளார்.. அது மட்டுமல்லாமல், நைம் அகமது திருமணமானவர் என்று தெரிந்தும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு கொண்டதாக அவருக்கு எதிராக எந்த புகாரையும் அளிக்கவில்லை… வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தவறான வாக்குறுதியை நம்பி, அப்பெண் பாலியல் உறவுக்கு சம்மதித்துள்ளார் என்று கூற முடியாது..

தோல்வியில் முடியும் அனைத்து ஒருமித்த உறவுகளையும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது..” என்று கூறி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து நைம் அகமதுவை விடுவித்தனர்.. எனினும், திருமணமாகாமல் பிறந்த குழந்தைக்காக அந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சத்தை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

Maha

Next Post

இந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Sat Feb 4 , 2023
பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 90 பைசா வாட் வரி விதிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. பஞ்சாபில் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், அரசின் கூடுதல் வருவாயை அதிகரிக்க பெட்ரோல் மற்றும் டீசல் மீது வாட் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமன் […]

You May Like