ஒட்டு மொத்த பெண்களும் இலவச பேருந்தை புறக்கணிக்க வேண்டும் பிரேமலதா விஜயகாந்த்…

தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களும் , இலவச பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ’’ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பண்டிகை காலத்தில் வருமானம் பார்க்க அதிக விலை அறிவித்துள்ளார்கள். வசதியானவர்கள் ஆம்னி பேருந்தில் செல்லட்டும் ஏழை மக்கள் அரசு பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் கூறுகின்றார். இதை கூறுவதற்கு அவர் ஏன் அமைச்சராக இருக்க வேண்டும். ஒரு முறை பயணிக்க ரூ.4000 என்றால் அதன் பின்னர் ஊருக்கு சென்று பண்டிகை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

பண்டிகை நாட்களில் சாதாரண நாட்களை விட கட்டணம் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. எல்லாமே வியாபாரம் என்றால் அரசும் வியாபார ரீதியாக நடக்கின்றதா -?இது மக்களுக்கான அரசு கிடையாதா? என்ற கேள்வி எழுகின்றது. இது கண்டனத்திற்குரியது. அரசு பேருந்து தரமாக வைத்தால்மக்கள் ஏன் தனியார் பேருந்தில் பயணிக்கப்போகின்றார்கள். அப்படி இல்லை என்றால் ஆம்னிபேருந்து போல் இருக்கும் அரசு பேருந்துகளில் பண்டிகை காலங்களில் குறைவாக இருந்தால் மக்கள் அதை பயனபடுத்துவர்கள். என தெரிவித்தார்.

மேலும் ஒரு அமைச்சர் ஓசியில் பெண்கள் பயணிக்கின்றார்கள் எனவும் .மற்றொரு அமைச்சர் பெண்களுக்கு மாதம் ரூ.1000 தருவதற்கு இப்போதுதான் சில்லறை மாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்றார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு வெற்றிக்கு பின் ஒரு நிலைப்பாடு. அந்த மூதாட்டி சொன்னது போல ஒட்டு மொத்த தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். அப்படி புறக்கணித்தால் தான் இந்த ஆட்சியாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகஇருக்கும் என தெரிவித்தார்.

Next Post

அதிமுகவில் திடீர் பரபரப்பு..!! ’எடப்பாடி பழனிசாமி கூட எங்களுடன் இணையலாம்’..!! - டிடிவி தினகரன்

Sun Oct 2 , 2022
எடப்பாடி பழனிசாமி துணிச்சல் இல்லாதவர் என்றும் தானும் சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் நேரம் வரும்போது ஒன்றிணைவோம் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டதால் நான் அதை […]
அதிமுகவில் திடீர் பரபரப்பு..!! ’எடப்பாடி பழனிசாமி கூட எங்களுடன் இணையலாம்’..!! - டிடிவி தினகரன்

You May Like