சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

தமிழில் ரீமேக்காகும் அல்லு அர்ஜுனின் வெற்றிப்படம் : ஏமாற்றத்தில் சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன..?

அல்லு அர்ஜுன் நடித்து தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய, கடும் போட்டி நிலவியது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏமாற்றம் மட்டும் மிஞ்சியதாக கூறப்படுகிறது.

sivakarthikeyan new

சின்னத்திரையில் தனது கெரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

நடிகர் என்பதை தாண்டி, தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக கலைஞராக திகழ்ந்து வருகிறார். ஏற்கனவே பல நடிகர்கள் இயக்குனர்களாகவும், இயக்குனர்கள் நடிகர்களாக மாறி வரும் நிலையில், சிவகார்த்திகேயனும் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனினும் தனது கெரியரின் தொடக்கத்தில் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு வெளியான சீமாராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ போன்ற படங்கள் தோல்வியை சந்தித்ததால் தொடர் சரிவை சந்தித்து வந்தார் சிவகார்த்திகேயன். இதில் கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படம் மட்டும் ஓரளவு தப்பித்தது என்று சொல்லலாம். எனவே அடுத்து ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்தியேன் உள்ளார்.

sivakarthikeyan

இந்நிலையில், தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற வைகுந்தபுரமுலோ படத்தின் தமிழ் ரீமேக் உரிமைகளை சிவகார்த்திகேயன் பெற முயற்சித்தாகவும், ஆனால் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்பா, மகன் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வைகுந்தபுரமுலோ இப்படத்தில் அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

allu arjun vaikundapuramloo

இதனைத் தொடர்ந்து இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. எனவே இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமைகளை பெறும் முயற்சியில், மோகன் ராஜா, விஜய் சந்தர் ஆகியோர் உள்ளதாக தெரிகிறது.

இப்படத்தின் ரீமேக் உரிமை கிடைத்தால் மோகன் ராஜா, தனது தம்பியான ஜெயம் ரவியை வைத்து இயக்கி ஹிட் கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளாராம். இதே போக், வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர், இதனை சிம்புவை ரீமேக் செய்து தனக்கு, சிம்புவிற்கும் வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறாராம்.

mohan raja

இந்த சூழலில் இந்த வரிசையில், சிவகார்த்திகேயனும், இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பெற முயற்சித்தாராம். ஆனால், அல்லு அர்ஜூன் தரப்பில் சிவகார்த்திகேயனை ரீமேக் பற்றி பேச கூட வரவேண்டாம் என்று தெரிவித்து விட்டார்களாம். இதனால் சிவகார்த்திகேயன் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

1newsnationuser1

Next Post

பயங்கரவாதிகள் வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள் - ஐ.நா எச்சரிக்கை

Fri Apr 10 , 2020
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு முதல்முறையாக ஆலோசனைக் கூட்டத்தை ஐ.நா நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதற்காக செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஐ.நா. சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.நா தலைவர் அன்டோனியா குடரெஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ஒவ்வொரு நாடும் கொரோனா தொற்று காரணமாக மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுகாதாரத்துறையில் முதல் முறையாக எண்ணிப் […]
U.N. Head Antonio Guterres.jpg

You May Like