"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

144 தடை உத்தரவு எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்.. சென்னை பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்..

தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளதால் சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

chennai bus crowd

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில் இன்று மிகமுக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் “ கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாளை மாலை முதல் வரும் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படும்.

பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் விதமாக 144 தடை உத்தரவு அமலுக்கு வரும். இந்த தடை உத்தரவு காரணமாக, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிக்கள் உள்ளிட்ட எந்த போக்குவரத்தும் இயங்காது” என்று தெரிவித்தார்.

tn cm edapadi

இந்நிலையில் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால், கோயம்பேடு, பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று முதல் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், மிகக்குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

இதனால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவே 144 தடை உத்தரவு அமலுக்கு வர உள்ள நிலையில், இன்று பேருந்து நிலையங்களில் அதிகளவு மக்கள் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

அதென்ன 144 தடை உத்தரவு..? தடையை மீறினால் என்ன நடக்கும்..? இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு..?

Mon Mar 23 , 2020
கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார். சரி.. 144 தடை உத்தரவு என்றால் என்ன..? தடை நேரத்தில் அரசு உத்தரவுகளை மீறினால் என்ன நடக்கும்.. என்னென்ன சேவைகள் பொதுமக்களுக்கு கிடைக்கும்..? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. […]
section 144

You May Like