வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு.. குழப்பத்தில் ஐரோப்பிய நாடுகள்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு மற்ற ஐரோப்பிய நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

spain lockdown

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1,26,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 4,84,729 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு அதிகபட்சமாக 6,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 26,064 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளில் அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் ஸ்பெயினில் இதுவரை சுமார் 1,47,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,255 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் ஸ்பெயின் 2வது இடத்தில் உள்ளது.

corona ward

எனினும் தற்போது அந்நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில கட்டுபாடுகளை தளர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கடைகள், பார்கள், உணவகங்கள் ஆகியவை ஏப்ரல் 26-ம் தேதி வரை மூடியிருக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸ் அறிவித்தார்.

இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கட்டுமானம் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுமார் 3 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்.

இவர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் பொது இடங்களில் காவல்துறையினர் முகக்கவசங்களை வழங்கி வருகின்றனர்.

ஆனால் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வராத சூழலில், ஸ்பெயின் அரசு ஊரடங்கை தளர்த்தியதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அரசு செயல்படுவதாகவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

spain n

ஸ்பெயினைப் போல மற்ற ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு தளர்த்துவது குறித்த தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக சிதைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, கட்டுப்பாடுகளை தளர்த்துவதா அல்லது கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதா என்று குழப்பத்தில் உள்ளன.

ஊரடங்கை தளர்த்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அறிய, இத்தாலி சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இதே போல் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த முடிவை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், நாளை அறிவிக்க உள்ளார்.

சிறிய கடைகளை திறக்க ஆஸ்திரியா ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பெரிய கடைகள் மே 1 வரை மூடியிருக்கும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

நாளை முதல் பள்ளிகளை திறக்க டென்மார்க் அரசு முடிவு செய்துள்ளது. பொதுஇடங்கள் மக்கள் கூடுவதற்கும், பார்கள், உணவகங்கள் ஆகியவற்றை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

அவசர தேவைகளுக்க வெளியூர்செல்ல ஆன்லைனிலே அனுமதி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

Wed Apr 15 , 2020
கோவை : ஊரடங்கு காலத்தில் அவசர தேவைக்களுக்காக வெளியுர்களுக்கு பயணம் செய்வோர் ஆட்சியர் அலுவலகம் வராமல் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதியினை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் திருமணம், மருத்துவ தேவை, போன்ற அவசர தேவைகளுக்கு செல்வோர்கள் முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என அரசின் சார்பில் […]
kovai collector office

You May Like