இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கொரோனா வந்தாலும் பரவாயில்லை.. நடை பயிற்சி செய்தால் போதும்.. சென்னையில் அதிகளவில் மக்கள் கூடுவதால் ஆபத்து..?

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பொது இடங்களில் மக்கள் அதிகளவு கூட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்வது மக்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாகவே அமைந்துள்ளது.. இந்த ஆபத்து குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு..

chennai marina
copyrights by 1newsnation

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் ஒரு கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் என்றும், அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என்றோ, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றோ யாரும் எதிர்பார்க்கவில்லை.. ஆம்.. கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ்.. இன்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டி படைத்து வருகிறது இந்த நோய்..

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் இன்று, உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவிவிட்டது. எனவே கொரோனாவை பேண்டமிக் எனப்படும் பெருந்தொற்று என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்த நோயை எப்படி தடுப்பது என்பது தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இன்றைய கணக்குப்படி உலகளவில் சுமார் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2,45,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 88,000 பேர் குணமடைந்திருந்தாலும் கூட, உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது.

italy corona

சீனாவில் இதுவரை 80, 967 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 71,150 பேர் குணமடைந்துள்ளனர். ஆக, சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில், இத்தாலி, ஈரான், ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், தென்கொரியா, சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் 427 உயிரிழந்ததால், இத்தாலியில் பலி எண்ணிக்கை 3,405-ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

corona

இப்படி கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன..? கடந்த சில தினங்களாக இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்லூரிகள், வணிக வளாகங்கள், சுற்றுலாத் தளங்கள், சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வீடுகளில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்துமாறு, நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவுதலை தடுக்க வேண்டும் என்றால், அத்தியாவசிய தேவைகளை தவிர, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டது கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தானே தவிர, வழக்கமான விடுமுறை போல சந்தோஷமாக கழிப்பதற்கு அல்ல.

theatres closed

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் தமிழகத்தில் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்கள், பூங்காக்கள், மால்கள், கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என்பது தான் திரும்ப திரும்ப கூறப்படும் எச்சரிக்கை. இது போன்ற இக்கட்டான சூழலில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் தான் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

corona

உதாரணமாக பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் நடைபயிற்சி செய்வது வழக்கம். அதில் எந்த தவறும் இல்லை தான். ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில், தினமும் காலையில் ஆயிரக்கணக்கானோர் சென்னை மெரினா கடற்கரை செல்வதை பார்க்க முடிகிறது. 20 முதல் 50 பேர் கூடுவதற்கே அரசு தடை விதித்துள்ள நிலையில், இப்படி அதிகமக்கள் செல்வது அவர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே ஆபத்தை ஏற்படுத்தும்.

chennai marina walking
copyrights by 1newsnation

உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே பெரும்பாலனவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் இந்த சூழலில், இப்படி அதிகமான மக்கள் ஒன்றாக நடைபயிற்சி மேற்கொள்வது என்பது ஆபத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

எந்த காரணத்திற்காக அவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனரோ, அந்த காரணமே அர்த்தமில்லாமல் போய்விடும்.. உயிரை அடமானம் வைத்து உடல்நலத்தை காத்து என்ன பயன்..? அதற்காக இது நடைபயிற்சிக்கு எதிரான பதிவல்ல.. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் வரை பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி தான் இது.

அது நடைபயிற்சிக்காக இருந்தாலும் சரி, வேறு எதற்காக இருந்தாலும் சரி.. மக்கள் அதிகமாக வெளியில் செல்ல வேண்டாம்.. தங்கள் வீட்டிலோ அல்லது மொட்டை மாடியிலோ நடைபயிற்சி மேற்கொள்ளலாம். ஏனெனில் ஆபத்து வந்த பிறகு அதை நினைத்து வருந்துவதை விட, வரும் முன் காப்பது நல்லது தானே..

1newsnationuser1

Next Post

கொரானா உயிர்பலியில் இத்தாலி முதலிடம்..

Fri Mar 20 , 2020
இத்தாலியில் கொரானா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,045 ஆக உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவிற்கு அடுத்த படியாக இத்தாலியில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ந்து நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தூக்கி கொண்டே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் […]
2020 03 18T160552Z 2003220612 RC2GMF90ACJ0 RTRMADP 3 HEALTH CORONAVIRUS ITALY HOMES 1584559495173 1584559509145

You May Like