UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

மோடி தீபங்கள் தானே ஏற்றச் சொன்னார்.. மக்கள் ஏன் பட்டாசு வெடித்தனர்..? கொரோனாவை கொண்டாடிய இந்தியா..

கொரோனாவை ஒற்றுமையாக எதிர்த்து போராடும் விதமாக 5-ம் தேதி இரவு நாட்டு மக்களை மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஒரு சிலரோ ஒருபடி மேலே போய், பட்டாசு வெடித்து கொண்டாடினர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த இக்கட்டான சூழலில் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

fire crackers

கொரோனாவின் தாக்கம் குறித்து மூன்றாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, 5-ம் தேதி இரவு 9 மணியளவில் அனைவரும் 9 நிமிடம் தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் அல்லது மொபைல் பிளாஷ்லைட்களின் மூலம் விளக்கேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் விளக்கேற்றுவதன் மூலம் நாம் ஒற்றுமையாக உள்ளதை காட்டுவோம் என்று தெரிவித்த மோடி ஊரடங்கின் போது யாரும் தனியாக இல்லை என்றும் 130 கோடி மக்கள் ஒவ்வொருவருடனும் உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் உள்ள மக்கள் தீபங்களை ஏற்றி, தங்கள் ஒற்றுமையை நிரூபித்தனர். அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களிலும் இன்றிரவு தீபம் ஏற்றப்பட்டது. ஒரு சில வீடுகளை தவிர, பலர் தீபங்களை ஏற்றியும், மொபைல் பிளாஷ் லைட்டுகளை அடித்தும், டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டும் மோடியின் அறிவுரையை பின்பற்றினர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் தீபங்களை ஏற்றினர்.

india lighting against covid 19

இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய் பட்டாசுகளை வெடித்தும், வண்ணமயமான வான வேடிக்கைகளின் மூலமும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், அதன் ஆபத்தை உணராமல் எதற்கு பட்டாசு வெடித்து கொண்டாடினர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மோடியின் இந்த வேண்டுகோள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது பட்டாசு வெடிக்கப்பட்ட சம்பவமும் விவாதப் பொருளாகி உள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சமூகத்தின் அடிதட்டு மக்கள், விளிம்பு நிலை மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவுக்கு நாம் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை.

ஆனால் இந்த இக்கட்டான சூழலில் கூட மோடியின் வேண்டுகோளை பயன்படுத்தி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடியுள்ளதை கொரோனாவின் ஆபத்தை உணராமல் மக்களின் அறியாமை என்று சொல்வதா அல்லது கொரோனாவை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுப்பதை விட்டு, இது விளக்கு ஏற்றுங்கள் என்று கூறிய பிரதமரின் கவனமின்மை எனக் கூறுவதா என்று தெரியவில்லை.

எது எப்படியோ கைதட்டினாலும், விளக்கு ஏற்றினால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து, அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை எப்படி குறைக்கலாம், அல்லது அதிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றலாம் என்று அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்..

1newsnationuser1

Next Post

நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி மூலம் வழக்கு விசாரணை?..

Mon Apr 6 , 2020
நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி மூலம் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கான, வழிமுறைகளை வகுப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சூழலில், அவசர கால வழக்குகளை மட்டும் உச்சநீதிமன்றம் காணொலிக் காட்சி மூலம் விசாரித்து வருகிறது. இதனிடையே, மின்னணு வாயிலான நீதிமன்ற நடைமுறைகள் தொடா்பாக முடிவெடுக்கும் உச்சநீதிமன்ற குழுவின் தலைவராக உள்ள நீதிபதி சந்திரசூட், உயா்நீதிமன்றங்களில் உள்ள […]
supreme court

You May Like