ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

ஊரடங்கு உத்தரவு.. டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற நபர் நெடுஞ்சாலையில் உயிரிழந்ததால் அதிர்ச்சி..

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக 200 கி,மீ தூரத்திற்கு மேல் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

delhi migrant workers

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். ரயில்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் வேலை செய்த மற்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி வேலை, தங்குமிடம், பணம் எதுவுமின்றி, டெல்லியில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புலம் பெயரும் ஆயிரக்கணக்கானோரில் ரன்வீர் சிங்கும் ஒருவர். 38 வயதான இவர் டெல்லி டெலிவரி ஏஜெண்ட் வேலை பார்த்து வந்தார். டெல்லியில் இருந்து சுமார் 326 கி.மீ தொலைவுள்ள மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவடத்திற்கு செல்வதற்காக நடக்க தொடங்கினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துவிட்டார் ரன்வீர். அங்கிருந்த டீ கடைக்காரர் ஒருவர் ரன்வீருக்கு டீயும், பிஸ்கட்களும் வழங்கியுள்ளார். ஆனால் அவரது கிராமத்திற்கு 80 கி.மீ தொலைவு இருந்த தூரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ரன்வீர் சிங் இறந்துவிட்டார்.

delhi migrant 1

இதனிடையே போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் மக்களுக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மாநில அரசுகள் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா ஆபத்தை உணராத டெல்லி..!

Sun Mar 29 , 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழவதும் ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலங்களில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். வேலை இல்லாத காரணத்தால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கான கி.மீட்டர்கள் நடந்தே செல்லும் செய்திகள் […]
EUNeaUFUUAEQuuy

You May Like