கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ்

ராணுவ வீரரின் தந்தை பேசும் வீடியோவை பதிவிட்டு, ராகுலை கடுப்பேற்றிய அமித்ஷா..

இந்தியா – சீன விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வரும் ராகுல்காந்திக்கு, ராணுவ வீரரின் தந்தை பேசும் வீடியோவை பதிவிட்டு அமித்ஷா பதிலளித்துள்ளார்.

ராணுவ வீரரின்

ராகுல்காந்தி குறித்து ராணுவ வீரரின் தந்தை பேசும் வீடியோ ஒன்றை மத்திய உள்துறை அமித்ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ குறித்து, ட்வீட் செய்துள்ள அவர் “ ஒரு துணிச்சல்மிக்க ராணுவ வீரரின் தந்தை இந்த வீடியோவில் பேசுகிறார். இதில் ராகுல்காந்திக்கு ஒரு தெளிவான செய்தி உள்ளது. ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக இருக்கும் நேரத்தில் ராகுல்காந்தி அற்ப அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் தேசிய நலனுக்கு ஒற்றுமையுடன் நிற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா பகிரிந்துள்ள வீடியோவில் பேசும் முதியவர் “ இந்திய ராணுவம் ஒரு வலிமையான ராணுவம். அதனால் சீனாவையும் பிற நாடுகளையும் தோற்கடிக்க முடியும். ராகுல் காந்தி, நீங்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. என் மகன் சண்டையிட்டான் … அவன் மீண்டும் போராடுவான். அவர் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். ” என்று கூறியுள்ளார்.

இந்திய – சீன எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதுகுறித்து ராகுல்காந்தி தினமும் ட்விட்டரில் பல்வேறு கேள்விகளையும், கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். இன்று காலை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பிரதமர் இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்பிடம் ஒப்படைத்துள்ளார். அப்பகுதி சீனாவின் வசம் இருந்தால், ஏன் நமது வீரர்கள் கொல்லப்பட்டனர். எங்கு அவர்கள் கொல்லப்பட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் “ கால்வானில் நடைபெற்ற தாக்குதலை சீனா திட்டமிட்டு நடத்தியுள்ளது தெளிவாகிறது. தூங்கிக் கொண்டிருந்த மத்திய அரசு, இந்த பிரச்சனையை மறைக்கிறது. அதற்கு விலையாக நமது ராணுவ வீரர்களை உயிர் தியாகம் செய்தனர்” என்று ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ. 50,000 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..

Sat Jun 20 , 2020
கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், வேலை, உணவின்றி தவித்து வந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான தூரம் பயணம் செய்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அவர்கள் ஊர் திரும்ப மத்திய […]
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முககவசமும், சமூக இடைவெளியும் தான் கொரோனாவிற்கு சிறந்த மருந்து- பிரதமர் மோடி

You May Like