வேலை இல்லாத மாணவர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பு…! வரும் 17-ம் இலவச முகாம் நடைபெற உள்ளது…! முழு விவரம்…

தருமபுரி மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

அரசுத்துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்தேர்வு அனுப்பப்படும்‌. இம்முகாமில்‌, பல்வேறு தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்துகொண்டு, விற்பனையாளர்‌, மார்க்கெட்டிங்‌ எக்ஸிக்யூட்டிவ்‌, சூப்பர்வைசர்‌, மேலாளர்‌, கம்ப்யூட்டர்‌ ஆப்ரேட்டர்‌, தட்டச்சர்‌, அக்கவுண்டன்ட்‌, கேசியர்‌, மெக்கானிக்‌ போன்ற பணிகளுக்கு, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்‌. பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்புஎன அனைத்துவித கல்வித்தகுதிக்கும்‌ ஆட்கள்‌ தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள்‌ தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ள அனைவரும்‌,வருகின்ற 17.02.2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ள,தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

செல்போனை தராவிட்டால் வெட்டிவிடுவேன்!... கத்தியை காட்டி தந்தையை மிரட்டிய மகன்!... சீனாவில் அதிர்ச்சி!

Thu Feb 16 , 2023
சீனாவில் செல்போனில் கேம் விளையாட விடாமல் தடுத்த தந்தையை கத்தியை காட்டி 13 வயது மகன் மிரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குவாங்சி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பல மணி நேரம் செல்போனில் விளையாடியுள்ளார். இதனால், பெற்றோர் பலமுறை கண்டித்தும் கேட்காததால், செல்போனை பறித்து அவனது தந்தை, மறைத்து வைத்துள்ளார். இதனால், அத்திரமடைந்த […]

You May Like