அண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு….! எப்படி பார்ப்பது…?

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் துறை மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இளநிலை பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


மாணவர்கள் தேர்வு முடிவுகளை coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள லாகின் ஐடி, பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உலக காகித பை தினம் இன்று!... நாம் ஏன் காகிதப் பைகளுக்கு மாற வேண்டும்?

Wed Jul 12 , 2023
ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மாசு அளவு அதிகரிப்பதை உலகம் காணும் நிலையில், உலக காகித பை தினத்தை கொண்டாடுவதும் பிளாஸ்டிக் பைகளின் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கியம். ஆண்டுதோறும் ஜூலை 12ஆம் தேதி உலக காகிதப் பை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காகிதப் பைகளைத் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து […]
Paper Bags

You May Like