தேர்தல் சதுரங்கம்: “புரோட்டோகால், வீடியோ வேன் புதுமையான வியூகம்..” எச்,ராஜா தலைமையில் குழு அமைத்த அண்ணாமலை..!

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வருடத்திற்கான பொது தேர்தல் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வியூகங்கள் பற்றி ஆலோசிக்க அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் தமிழகத்திற்கு வருகை புரிந்தார். கோவையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அந்த கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குழுவை வெளியிட்டு இருக்கிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தக் குழுவில் கார்வேந்தன், கே.பி ராமலிங்கம் மற்றும் ராம ஸ்ரீநிவாசன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் கால் சென்டர் புரோட்டோகால் அலுவலக நிர்வாகம் வீடியோவின் என அரசியல் பணிகளுக்காக 38 குழுக்களையும் நிர்ணயித்திருக்கிறார்.

Next Post

நாடாளுமன்ற தேர்தல்..!! வேட்பாளரை அறிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை..!! எந்த தொகுதியில் தெரியுமா..?

Mon Feb 5 , 2024
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டசபை தொகுதியில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு முறையும் இந்த நடைப்பயணத்தின் போது பாஜகவின் சாதனைகளை விளக்கி வருகிறார். அந்த வகையில் பேசும்போது, “2026 ஆம் ஆண்டு பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது கொய்யாப்பழத்திற்கும் பிரதமர் மோடி புவிசார் குறியீடு அறிவிப்பார். அணைக்கட்டு தொகுதியில் திமுக, அதிமுக மாறி மாறி பங்காளிகள் […]

You May Like