சென்னை முதலமைச்சர் அலுவலத்தில் பணியாற்றிய துணை செயாலாளர், உதவியாளர் மற்றும் ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் தொடர்ந்து பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு வருகிறது. கொரோனா இன்னும் சமூக பரவலை எட்டவில்லை என்று நாளுக்கு நாள் பல அரசியல் தலைவர்கள் கூறிவரும் ஐம்பத்து இரண்டாயிரத்தை கடந்து பாதிப்பு எண்ணிக்கை நீள்கிறது. இதில் முக்கியமாக சென்னை இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்று நகரங்களில் ஒன்றாக இருக்கிறது.
இன்று முதல் கடும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய துணை செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.