தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தமிழகத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருக்கிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதிதாக இன்று தமிழகத்தில் 646 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு தொற்று உறுதியானதால், சென்னை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11, 640-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 611 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதால் கொரானா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,342-ஆக அதிகரித்துள்ளது.