“இதை செய்யுங்கள்.. முதலீடு செய்ய நான் தயார்..” ஆனந்த் மஹிந்திரா அதிரடி அறிவிப்பு.!

மகேந்திரா அண்ட் மகேந்திரா மோட்டார் நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் இளம் தலைமுறை கண்டுபிடிப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில் நீர் நிலைகளை சுத்தம் செய்யும் தானியங்கி ரோபோக்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவின் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் முன் வந்தால் அதற்கு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. இது தொடர்பாக தனது ‘X’ தளத்திலும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

தற்போது நீர் நிலைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் தானியங்கி ரோபோக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டது போல் இருக்கிறது. இந்த ரோபோக்களை நாம் இப்போதே தயாரிக்க வேண்டும். இதனை தயாரிக்கும் முன் வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

Next Post

தகாத உறவால் வந்த வினை.! தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட இளைஞர்.! பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு.!

Fri Feb 2 , 2024
கர்நாடக மாநிலத்தில் இளைஞர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் பாதி எரிந்த நிலையில், இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் . அங்கு சென்ற காவல் துறையினர், இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் அடையாளம் காண்பதிலும் சிக்கல் […]

You May Like